Petrol, Diesel | கலால் வரி குறைந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலை பற்றிய முழுமையான விவரம் இதோ...
தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43க்கு விற்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனால் இன்று காலை முதல் இந்தியாவெங்கும் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது.
✅ Government announces Excise Duty reduction on Petrol and Diesel on the eve of Diwali
— Ministry of Finance (@FinMinIndia) November 3, 2021
✅ Excise duty on Petrol and Diesel to be reduced by Rs. 5 and Rs. 10 respectively from tomorrow
Read More ➡️ https://t.co/aiSPN2YpKq
(1/2) pic.twitter.com/UPiDtAh4Kt
நாட்டில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தமிழ்நாட்டில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கான விலை ரூ.109ஐக் கடந்தது. மற்ற சில மாநிலங்களில் ரூ. 120ஐக் கடந்து விற்பனையாது. இது சாமானியர்களை பெரிதும் பாதித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களும் வரியைத் தளர்த்தும்படி மத்திய அரசுக்குத் தொடர் கோரிக்கை வைத்து வந்தன. இதற்கிடையேதான் நேற்று பெட்ரோலுக்கும் லிட்டருக்கு ரூ 5ம் டீசலுக்கு லிட்டருக்கு ரூ 10ம் குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 106.76 ஆக இருந்த நிலையில் தற்போது 101.40க்கு விற்கப்படுகிறது. அதேபோல, டீசல் விலை ரூ.102.59 ஆக இருந்த நிலையில் தற்போது லிட்டருக்கு ரூபாய் 91.43க்கு விற்கப்படுகிறது.
மும்பையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 115.85 ஆக இருந்த நிலையில் தற்போது 109.98க்கு விற்கப்படுகிறது. அதேபோல, டீசல் விலை ரூ.106.62 ஆக இருந்த நிலையில் தற்போது லிட்டருக்கு ரூபாய் 94.14 க்கு விற்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 114.49 ஆக இருந்த நிலையில் தற்போது 108.20க்கு விற்கப்படுகிறது. அதேபோல, டீசல் விலை ரூ.107.40 ஆக இருந்த நிலையில் தற்போது லிட்டருக்கு ரூபாய் 94.62 க்கு விற்கப்படுகிறது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 112.73 ஆக இருந்த நிலையில் தற்போது 106.36க்கு விற்கப்படுகிறது. அதேபோல, டீசல் விலை ரூ.106.12 ஆக இருந்த நிலையில் தற்போது லிட்டருக்கு ரூபாய் 93.47 க்கு விற்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 113.93 ஆக இருந்த நிலையில் தற்போது 107.64க்கு விற்கப்படுகிறது. அதேபோல, டீசல் விலை ரூ.104.50 ஆக இருந்த நிலையில் தற்போது லிட்டருக்கு ரூபாய் 92.03 க்கு விற்கப்படுகிறது.
டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.04 ஆக இருந்த நிலையில் தற்போது 103.97க்கு விற்கப்படுகிறது. அதேபோல, டீசல் விலை ரூ.106.62 ஆக இருந்த நிலையில் தற்போது லிட்டருக்கு ரூபாய் 98.42 க்கு விற்கப்படுகிறது.