Petrol and diesel prices Today: ம்... ஸ்டெடி... ஸ்டெடி... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US: 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  


இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது. அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவை விட அதிகம் உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த மே 16ஆம் தேதி  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  ரூ.94.31க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.88.7க்கு விற்பனை செய்யப்பட்டது. 


ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி- பிரதமர் மோடி


இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தும், எந்த மாற்றமும் இன்றியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.86க்கும், இதேபோல், ஒரு லிட்டர் டீசல்  ரூ.88.87க்கும் விற்பனை செய்யப்பட்டது. 


இந்நிலையில், சென்னையில் கடந்த 25ஆம் தேதி பெட்ரோல் விலை 95 ரூபாய் தாண்டி வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசு அதிகரித்து ரூ.95.06க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலை 24 காசு அதிகரித்து ரூ.89.11க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் விலை 96 ரூபாயை தாண்டியது.



Petrol and diesel prices Today: ம்... ஸ்டெடி... ஸ்டெடி... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!


இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசு ரூ.96.47க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலை 28 காசு அதிகரித்து ரூ.90.66க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.96.71க்கும் மற்றும் ஒரு டீசல்  விலை 26 காசு உயர்ந்து ரூ.90.92க்கும் விற்பனை  செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைமாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.  நாட்டில் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஒருமாதம் ஆன நிலையில் பெட்ரோல் விலை குறைக்கக்கோரி பலர் வலியுறுத்துகின்றனர். கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை நிலையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மற்ற நகரங்களில் விலை 


நகரம்                   பெட்ரோல்                      டீசல் 


டெல்லி                    94.76                                85.66


கொல்கத்தா          94.76                               88.51


மும்பை                   100.98                              92.99


30 நாளில் ஸ்டாலின் எழுதிய 6 கடிதங்கள்; யாருக்கு? எதற்கு? என்கிற முழு விபரம்!


 

Tags: petrol price diesel price Petrol and diesel price Petrol Price Today Rise petrol price today Petrol and diesel price rise petrol price today

தொடர்புடைய செய்திகள்

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

Gold Silver Price Today: பதுங்கிப் பாய்ந்த தங்கம்... இன்று அதிகரித்தது!

Gold Silver Price Today: பதுங்கிப் பாய்ந்த தங்கம்... இன்று அதிகரித்தது!

Gautam Adani Profile: ‛அதானி... அதானி... அதானி....’ குஜராத் டூ குளோபல் டிரேட் வரை பேசப்பட்ட யார் அந்த அதானி?

Gautam Adani Profile: ‛அதானி... அதானி... அதானி....’ குஜராத் டூ குளோபல் டிரேட் வரை பேசப்பட்ட யார் அந்த அதானி?

Petrol and diesel prices Today: தேற்றிக் கொள்ளுங்கள் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!

Petrol and diesel prices Today: தேற்றிக் கொள்ளுங்கள் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!