SIP vs SWP: முதலீட்டில் எஸ்ஐபி தெரியும்..! அதென்ன எஸ்டபள்யுபி? கணக்கு தொடங்குவது எப்படி, செயல்முறை என்ன?
Systematic Withdrawal Plan(SWP): முறையான திரும்பப் பெறுதல் எனப்படும் (SWP) முதலீட்டு திட்டம், எப்படி செயல்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Systematic Withdrawal Plan(SWP): முறையான திரும்பப் பெறுதல் எனப்படும் (SWP) முதலீட்டு திட்டத்திற்கான, கணக்கைதொடங்குவது உள்ளிட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
முதலீட்டு திட்டம்:
தடையற்ற சீரான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, வங்கிகள் வழங்கும் நிலையான வைப்புத்தொகை, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்ற நிலையான வருமான முதலீடுகள் பொதுவான விருப்ப தேர்வுகளாக உள்ளன. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகள் கூட உங்களுக்கு வழக்கமான வருமானத்தைத் தர உதவுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக, எஸ்ஐபி எனப்படும் முறையான முதலீட்டு முறை மற்றும் எஸ்டபள்யுபி எனப்படும் முறையான திரும்பப் பெறும் முறை ஆகிய இரண்டு திட்டங்களும் முதலீட்டாளர்களின் விருப்பத்தேர்வாக உள்ளது.
முறையான திரும்பப் பெறுதல் (SWP) என்றால் என்ன?
SWP இன் கீழ், நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் குறிப்பிட்ட பெரும் தொகையை முதலீடு செய்தால், சீரான இடைவெளியில் நீங்கள் திரும்பப் பெற வேண்டிய தொகை, பணத்தை திரும்பப் பெறுவதற்கான கால இடைவெளியை நீங்களே நிர்ணயிக்கலாம். உதாரணமாக, ஒரு வங்கியின் டாப் 200 ஃபண்டில் ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்று கருதுவோம். மாதத்திற்கு 10,000 ரூபாயை திரும்பப் பெற விரும்புவதாக வைத்துக்கொள்வோம். அந்த சூழலில் ஒவ்வொரு மாதமும் உங்களது மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டில் 10 ஆயிரம் ரூபாய் குறையும். ஒவ்வொரு மாதமும் பணத்தை திரும்பப் பெற்ற பிறகு, மீதமுள்ள உள்ள உங்களது தொகை மீண்டும் மியூட்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படும். அந்த வருவாய் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்
முறையான திரும்பப் பெறுதல் திட்ட உதாரணம்:
வ. எண் | தொடக்கத்தில் இருப்பு | மாதந்திரம் திரும்பப் பெறும் தொகை | வட்டி வருவாய் |
1 | 50,000 | ரூ.1000 | ரூ.408 |
2 | 49,408 | ரூ.1000 | ரூ.403 |
3 | 48,812 | ரூ.1000 | ரூ.398 |
4 | 48,210 | ரூ.1000 | ரூ.393 |
5 | 47,604 | ரூ.1000 | ரூ.388 |
SIP vs SWP: வித்தியாசம் என்ன?
SIP அல்லது முறையான முதலீட்டுத் திட்டம் என்பது ஒரு நிலையான ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தொகையை, மாதாந்திர அல்லது காலாண்டு போன்ற கால இடைவெளியில், ஒரு மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்யும் முறையாகும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மாதந்தோறும் அதற்கான பணம் தானாகக் கழிக்கப்படும் என்பதால், முதலீடு செய்வதற்கு SIP க்கு ஒழுக்கம் தேவைப்படுகிறது. சந்தை வீழ்ச்சியடையும் போது அதே தொகை அதிக யூனிட்களை வாங்குவதால், சராசரியாக ரூபாய் மதிப்பைப் பெறுவீர்கள். இது ஆபத்தை குறைக்கிறது மற்றும் குறைந்த தொகையில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழியாகும்.
அதேநேரம் SWP அல்லது முறையான திரும்பப் பெறுதல் திட்டம் என்பது, SIP-க்கு நேர் எதிரான ஒரு தலைகீழ் திட்டம் ஆகும். இதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்ப பெற மியூட்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்கிறீர்கள். மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருந்து நிலையான தொகையை திரும்பப் பெற இது உங்களை அனுமதிக்கிறது.
SWP கணக்க தொடங்குவது எப்படி?
- பொதுத்துறை மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளை அணுகி, முறையான திரும்பப் பெறுதல் திட்டத்திற்கான் கணக்கை தொடங்கலாம்
- SWP கணக்கில் உங்களது குறைந்தபட்ச ருப்புத்தொகை 25 ஆய்ரம் ரூபாயாக இருக்க வேண்டும்
- மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை என பணத்தை திரும்பப் பெறலாம்
- திட்டத்தின் காலம் என்பது முதலீடு செய்யும் தொகையை சார்ந்ததாகும்
- SWP உடன் ஒரு வருட லாக்-இன் காலம் இருந்தாலும் , எந்தவொரு வரி தாக்கங்களையும் எதிர்கொள்ளாமல் அல்லது நிதியின் தற்போதைய NAV இல் தொகையை மீண்டும் திட்டத்தில் மீண்டும் முதலீடு செய்யாமல் உங்கள் பணத்தை ஒரு பகுதியை அல்லது முழுவதையும் எளிதாகப் பெறலாம்
இந்த திட்டம் ஓய்வுபெற்றவர்களுக்கு மட்டுமின்றி, சீரான வருவாயை எதிர்பார்க்கும் அனைத்து தரப்பினருக்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.