மேலும் அறிய

Senior Citizen Savings Scheme: 60 வயசாயிடுச்சா? போஸ்ட் ஆபீஸில் உங்களுக்கான சரியான சேமிப்புத் திட்டம் இதுதான்!

senior Citizen Savings Scheme: 60 வயதை பூர்த்தி செய்த மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டுவதற்கான சரியான, சேமிப்புத் திட்டம் தபால் அலுவலகத்தில் உள்ளது.

Senior Citizen Savings Scheme: மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்டுவதற்கு உதவும்,  தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:

மத்திய அரசின் ஆதரவு பெற்ற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (SCSS) 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர்கள் அல்லது 50 வயதை எட்டிய முன்னாள் ராணுவ வீரர்கள் (சிவில் பாதுகாப்புப் பணியாளர்களைத் தவிர) ஆகியோர் பயன்படுத்தலாம். இதற்கான கணக்கை தனிநபராக தொடங்கலாம். அதேநேரம், கூட்டு கணக்கு என்றால் மனைவியுடன் சேர்ந்து மட்டுமே தொடங்க முடியும்.

கணக்கு திறப்பு:

அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான கணக்கைத் திறக்கலாம். SCSS கணக்கை தபால் நிலையத்திலும் திறக்கலாம். விண்ணப்பதாரர் கணக்கு திறப்பிற்கான படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான KYC ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் ஓய்வூதிய நிதி பெறுவது தொடர்பாக முதலாளியிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தின் நகலை இணைக்க வேண்டும். அனைத்து SCSS கணக்குகளிலும் மொத்த வைப்புத்தொகை ரூ. 30 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் வரை, பயனாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட SCSS கணக்குகளை பயன்படுத்தலாம்.

வைப்புத் தொகை வரம்பு:

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு 2023 பட்ஜெட்டில் வெளியானது. கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், கூட்டு கணக்கின் மற்றொரு நபர்  அல்லது திட்டத்தின் ஒரே நாமினியாக இருக்கும் மனைவி, கணக்கு அலுவலகத்திற்கு (அஞ்சல் அலுவலகம் அல்லது கணக்கு உருவாக்கப்பட்ட வங்கிக் கிளை) தகவல் தெரிவித்து SCSS கணக்கைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.1000 தொடங்கி அதிகபட்சமாக 30,00,000 உடன் கணக்கு தொடங்கலாம். வைப்புத்தொகையின் காலம் 5 ஆண்டுகளாகும், தேவைப்பட்டால் இதனை மேலும் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கலாம். இதற்கு எந்த வரம்பும் இல்லை.

வட்டி விவரங்களும், விலக்கும்:

ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் மீதான வட்டி விகிதத்தை அரசாங்கம் நிர்ணயிக்கிறது. ஜனவரி-மார்ச் 2024 காலாண்டிற்கான SCSS மீதான வட்டி விகிதத்தில் அரசாங்கம் எந்த மாற்றமும் செய்யவில்லை. கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வைப்புத்தொகைக்கு 8.2% வட்டியைப் பெறலாம். வட்டித்தொகை ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை பயனாளருக்கு வழங்கப்படும். ஆனால், இதற்கு வரி பொருந்தும்.  அதேநேரம், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் SCSS வரி விலக்கு உள்ளது. இருப்பினும், SCSS வரிச் சலுகை அதிகபட்சமாக ரூ. 1,50,000 ஆக உள்ளது. ஒரு நிதியாண்டுக்கு ரூ. 50,000க்கு மேல் வட்டி இருந்தால் டிடிஎஸ் பொருந்தும்.

முன்கூட்டியே திரும்பப் பெறுதல்:

முன்கூட்டியே திரும்பப் பெறுதல் திட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறுவதற்கு அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஒரு வருட முதலீட்டு காலம் முடிவதற்குள் கணக்கை மூடினால், டெபாசிட் தொகையிலிருந்து ஒரு சதவிகிதம் நீக்கப்படும். முன்பு, ஒரு வருட கால அவகாசம் முடிவதற்குள் கணக்கு மூடப்பட்டால், கணக்கில் வைப்புத்தொகைக்கு செலுத்தப்பட்ட வட்டி வைப்புத்தொகையிலிருந்து எடுக்கப்படும். நிலுவைத் தொகை கணக்கு வைத்திருப்பவருக்கு அனுப்பப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்Salem Drunkard News | தலைக்கேறிய  போதை வெறிவீட்டை சூறையாடிய வாலிபர்கள் சேலத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
காஞ்சிபுரத்தை உலுக்கிய கொடூரம்.. துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த விபத்து - நடந்தது என்ன?
காஞ்சிபுரத்தை உலுக்கிய கொடூரம்.. துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த விபத்து - நடந்தது என்ன?
Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..
Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..
Breaking News LIVE 2nd NOV:
Breaking News LIVE 2nd NOV: "இந்தியாவிலேயே தமிழ்நாடும், கேரளாவும்தான் முற்போக்கு மாநிலங்கள்” - துணை முதலமைச்சர் உதயநிதி
Seeman:
Seeman: "கூமுட்டை.. Very Wrong Bro" விஜய்யை தாறுமாறாக தாக்கிப் பேசிய சீமான்!
Embed widget