எஸ்பிஐ வங்கியின் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்.. கடைசி தேதி நீட்டிப்பு.. வெறும் 400 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட்...
எஸ்பிஐ வங்கியின் அம்ரித் கலாஷ் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் அம்ரித் கலாஷ் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கான கடைசி தேதியை மேலும் நீட்டித்துள்ளது. அம்ரித் கலாஷ் ஸ்பெஷல் திட்டம் ஜூன் மாதம் இறுதியோடு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், SBI வெப்சைட்டின் அண்மை தகவலின்படி (Amrit Kalash) அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டம் ஆகஸ்ட் 15, 2023 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடிமக்கள் மற்றும் NRI வாடிக்கையாளர்களுக்கான SBI-யின் அம்ரித் கலாஷ் டெபாசிட் FD திட்டம் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் அறிமுகமாகிறது. இது ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமாகும். 400 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்டது. SBI-யின் இந்த அம்ரித் கலாஷ் டெபாசிட் திட்டமானது பொது மக்களுக்கு 7.10 சதவீதம் வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.60 சதவீதம் வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. மற்ற tenors-களுடன் ஒப்பிடுகையில் , இது, சீனியர் சிட்டிசன்கள் மற்றும் பொது மக்களுக்கு SBI வழங்கும் அதிக வட்டி விகிதம் கொண்ட ஸ்பெஷல் FD திட்டம்.400 நாட்களுக்கு மட்டுமே இந்த ஸ்பெஷல் திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.
அம்ரித் கலாஷ் திட்டம் இந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் முதலில் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இந்த திட்டத்தின் கடைசி தேதி ஜூன் 30 என அறிவிக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 15 வரை இந்த ஸ்பெஷல் திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அம்ரித் கலாஷ் FD திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்: இந்த FD திட்டம் ரூ.2 கோடிக்கு குறைவான என்ஆர்ஐ ரூபாய் டெர்ம் டெபாசிட்கள் உட்பட டொமஸ்டிக் ரீடெயில் டெர்ம் டெபாசிட்களுக்கு பொருந்தும். இந்த FD திட்டம் 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்டது. அம்ரித் கலாஷ் திட்டத்தின் வட்டி, மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
SBI ஊழியர்கள் மற்றும் SBI-யில் வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த ஸ்பெஷல் திட்டத்தில் கூடுதலாக 1 சதவீதம் வட்டி கிடைக்கும். இத்திட்டத்தில் கடன் வசதி உள்ளது. கணக்கு முடிவடையும் முன்பு பணம் எடுக்கும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்பும் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ-யின் வங்கிக்கு சென்றோ, நெட்பேங்கிங் மூலமோ அல்லது எஸ்பிஐ யோனோ மொபைல் ஆப்-ஐ பயன்படுத்தியோ தங்கள் பணத்தை முதலீடு செய்யலாம்.
மேலும் படிக்க