Provident Fund New Rules : உங்களுக்கு PF கணக்கு இருக்கா? புது ரூல்ஸ் அறிமுகம்.. ஏப்ரலில் இருந்து அமலாகும் விதிகள் இதுதாங்க..
Provident Fund New Rules : பிஎஃப் கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகள், அதிக வருமானம் உள்ளவர்கள் அரசின் நலத்திட்டத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதாக அமைந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Provident Fund New Rules
ஏப்ரல் மாதம் முதல் பிஎஃப் கணக்கில் அமலாகவுள்ள புதியவிதிமுறைகளின் படி, பிஎஃப் பங்களிப்பு 2.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மாத சம்பளம் வாங்கும் அனைத்துப்பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎஃப் கணக்கு கண்டிப்பாக இருக்கும். ஊழியர்களின் பங்களிப்பு எவ்வளவு அதனை ஒவ்வொரு நிறுவனங்களும் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்துவருகிறது.பென்சன் பெற முடியாதவர்களுக்கு எதிர்க்கால அச்சமின்றி வாழ்வதற்கு மிகப்பெரிய உதவியாக அமைந்தது. மேலும் ஒவ்வொரு பணியாளர்களும் தங்களின் பிஎஃப் கணக்கிலிருந்து அவசரத் தேவைக்குப் பணம் எடுத்துக்கொள்ளும் வசதியும் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தான் 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த போது, ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பிஎஃப் பங்களிப்பு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார்..
இதனையடுத்து தற்போது PF பங்களிப்பு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கான வரி விதிப்பு குறித்து வருமான வரித்துறையும் கடந்த ஆண்டு விதிமுறைகளை அறிவித்திருந்தது. அதன்படி பிஎஃப் கணக்கு 2 கணக்குகளாகப் பிரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது 2021-2022 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கு ஒரு தனி கணக்கும், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு தனி கணக்கும் பராமரிக்கப்படும் எனவும் புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இதனால் வட்டிக்கு வரி மற்றும் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேலான பங்களிப்பு முறைகளை எளிதில் கணக்கிட முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த விதிமுறை தான் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இதோடு ஊழியர்களின் பங்களிப்பை தெரிந்துக்கொள்ளும் விதமாக, ஒரு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் இரண்டு கணக்குகள் பிரிக்கப்படவுள்ளது. அதன்படி, 2021- 2022 ஆம் ஆண்டியல் செலுத்தப்பட்ட பிஎஃப் பங்களிப்புக்கு தனி கணக்கு ஒதுக்கப்படும். இதற்கு எந்த எந்த வரியும் விதிக்கப்படாது. மேலும் மற்றொரு கணக்கில் செலுத்தப்படம் பிஎஃப் பங்களிப்புக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி கணக்கிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புதிய விதி அனைவரும் பொருந்தாது எனவும் சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் இதன் மூலம் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அதிக வருமானம் பெறும் ஊழியர்களை பாதிக்கும் வகையில் இந்த புதிய விதிமுறை உள்ளது. குறைவான சம்பளம் வாங்குவோர் அல்லது அரசு விதித்துள்ள வரம்பிற்குள் இருந்தால் இந்த புதிய விதியால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்த புதிய விதிகளின் நோக்கம், அதிக வருமானம் உள்ளவர்கள் அரசின் நலத்திட்டத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதாக அமைந்துள்ளது எனக்குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.