Post Office RD Scheme: போஸ்ட் ஆபிஸ் ஆர்டி: மாதம் ரூ.10 ஆயிரம் செலுத்தினால் ரூ.7 லட்சம் முதிர்வுத் தொகை!
மாத வருமானம் பெறுவோர் மற்றும் தினக்கூலிகள் ஆகியோருக்கு வசதியாக 100 ரூபாயிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் ஆர்டி கணக்கில் முதலீடு செய்யலாம்.
தபால் நிலைய தொடர் வைப்பு நிதியில் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 5.8 சதவீத வட்டியுடன் 7 லட்சம் ரூபாய் வரை முதிர்வுத்தொகையினைப் பெற முடியும்.
குடும்பத்தேவைகளுக்காக அயராது உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியினையாவது சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் பெரும்பாலானோர் நிச்சயம் தொடர்ச்சியான வைப்பு (Recurring deposit – RD) கணக்கினை வைத்திருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தவறாமல் சேமித்து அதிக வட்டி விகிதத்தினை சம்பாதிக்க விரும்புவோருக்கான சிறந்த முதலீட்டு திட்டமாகவும் தொடர்ச்சியான வைப்புக் கணக்கினை மக்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக தொடர் வைப்பு நிதிக்கணக்கினை தபால் நிலையங்களில் மக்கள் சேமித்து வருகிறார்கள். இதன் மூலம் குறைந்த முதலீட்டில் 5 வருடத்தில் அதிக முதிர்வுத்தொகையினைப்பெற முடியும்.
முதலில் நாம் தபால் நிலையத்தில் தொடர் வைப்பு நிதி எனப்படும் ஆர்டி கணக்கினைத் தொடங்க வேண்டும் என்றால் தனியாக அல்லது கூட்டுக்கணக்காக இதனைத்தொடங்கலாம். குறிப்பாக மாத வருமானம் பெறுவோர் மற்றும் தினக்கூலிகள் ஆகியோருக்கு வசதியாக 100 ரூபாயிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் ஆர்டி கணக்கில் முதலீடு செய்யலாம். 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை தொடர் வைப்பு நிதிக்கணக்கினை ஒருவர் தொடரலாம். மேலும் இதற்கானக் கட்டணத்தினை ஒரு மாதத்தில் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஒரு வேளை நீங்கள் ஒரு மாதத்தின் 15 ஆம் தேதிக்குள் மேல் கணக்கினைத்தொடங்கியிருந்தால், ஆர்டி கணக்கிற்கான முதலீட்டு பணத்தினை மாதத்தின் கடைசி வேலை நாள்களில் டெபாசிட் செய்யலாம். ஒரு வேளை 15 ஆம் தேதிக்குள் பணம் டெபாசிட் செய்யாவிடில் இதற்கு அபராதத்தொகையினைக்கட்ட வேண்டிருக்கும். மேலும் தொடர்ந்து நான்கு தவணைகள் பணம் செலுத்தாமல் இருந்தால் ஆர்டி கணக்கு முடக்கப்படும். இதனையடுத்து அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கணக்கினைச் செயல்படுத்தலாம். இதுப்போன்று மக்களின் வசதிக்கான பல்வேறு நடைமுறைகளை தபால் நிலைய ஆர்டி கணக்கு கொண்டுள்ளது.
தற்போது பல்வேறு நாம் செலுத்தக்கூடியத் தொகைக்கு தபால் நிலையங்கள் அதிக வட்டியுடன் முதிர்வுத்தொகையினை வழங்கி வருகிறது. உதாரணமாக நாம் ஒவ்வொரு மாதமும் நம்முடைய ஆர்டி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்தி வந்தால் 5 ஆண்டுகளில் இந்த பணம் ரூபாய் 6 லட்சமாக இருக்கும். இதோடு இதற்கான வட்டித்தொகை மட்டும் ரூ.99,967 என மொத்தமாக முதிர்வுத்தொகையினை சுமார் 7 லட்ச ரூபாய் வரை பெற முடியும். எனவே நம்முடைய பணத்தினைச்சேமித்து அதன் மூலம் நல்ல முதலீட்டினைப் பெறுவதற்கு நிச்சயம் தபால் நிலையத் தொடர் வைப்பு நிதிக்கணக்கு உதவியாக இருக்கும்.
புதிய உச்சம் தொட்ட ஜூலை மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: ரூ.22 ஆயிரம் கோடியைக் கடந்தது!
வங்கி கணக்கு முடக்கப்படுவது எப்படி? முடக்கினால் வங்கி கணக்காளர் சந்திக்கும் பிரச்னை என்ன?