Mahila Samman Savings Certificate: ரிஸ்க் இல்லாம ரூ.28,000 வட்டியாக சம்பதிக்கலாம்..! மகளிர் கவுரவ சேமிப்பு சான்றிதழ் திட்டம்
Mahila Samman Savings Certificate: மத்திய அரசின் மகளிர் கவுரவ சேமிப்பு சான்றிதழ் திட்டம் தொடர்பாக இந்த தொகுப்பில் அறியலாம்.
Mahila Samman Savings Certificate: மத்திய அரசின் மகளிர் கவுரவ சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் முதலீட்டிற்கு, 7.5 சதவிகிதம் வட்டியாக வழங்கப்படுகிறது.
மகளிர் கவுரவ சேமிப்பு சான்றிதழ் திட்டம்:
நாட்டில் மகளிர் சக்தியை அதிகரிக்கும் வகையில், மகளிர் கவுரவ சேமிப்பு சான்றிதழ் எனும் புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது 31.03.2025 வரை அமலில் இருக்கும். பெண்கள் தங்களுக்காகவோ அல்லது 18 வயத மிகாத பெண்குழந்தைகளின் சார்பில் பாதுகாவலரோ இத்திட்டத்தின் கீழ் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. காலாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கில் சேர்க்கப்படும். கணக்கை தொடங்க குறைந்தபட்சத்தொகை ரூ.1000, அதிகபட்சத் தொகை ரூ.2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே தவணையாக இந்த டெபாசிட் தொகையை கட்ட வேண்டும்.
திட்டத்தின் முழு விவரங்கள்:
அரசாங்க ஆதரவு: மகிளிர் கவுரவ சேமிப்புச் சான்றிதழ் திட்டம் மத்திய அரசால் ஆதரிக்கப்படுவதால், பயனாளர்களின் முதலீட்டிற்கு எந்த ஆபத்தும் இருக்காது
தகுதி: பெண்கள் மட்டுமே இந்த திட்டம் மூலம் பயன்பெற முடியும். இதற்கான ஒரு கணக்கை பெண் அல்லது மைனர் பெண்ணின் பாதுகாவலர் திறக்கலாம். அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் இந்த கணக்கை தொடங்கலாம்.
முதலீட்டு வரம்புகள்: ஒரு கணக்கிற்கு அதிகபட்சமாக ரூ.2,00,000 வரை டெபாசிட் செய்யலாம். தேவைப்பட்டால் பயனாளர் மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது கணக்கைத் திறக்கலாம்.
முதிர்வு காலம்: இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது, இந்தக் காலத்தின் முடிவில் முதிர்வுத் தொகை செலுத்தப்படும்.
பகுதியளவு திரும்பப் பெறுதல்: பயனாளர்கள் முதலீட்டு பணத்தை செலுத்திய தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குப் பிறகு இருப்பில் இருந்து40 சதவிகிதம் வரையிலான பணத்தை எடுக்கலாம்.
வரிச் சலுகைகள்: இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரிச் சேமிப்புப் பலனுக்குத் தகுதியற்றது. அதேநேரம், திட்டத்தின் கீழ் ஈட்டப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
வட்டி விகிதம்: இந்தத் திட்டமானது 7.5 சதவிகிதம் நிலையான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது, வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறை வரவு வைக்கப்படும் மற்றும் கணக்கை மூடும் நேரத்தில் செலுத்தப்படும். உதாரணமாக 2 லட்ச ரூபாயை முதலீடு செய்தால், மாதம் ஆயிரத்து 250 ரூபாய் என்ற கணக்கில் 24 மாத முடிவில் 28 ஆயிரம் ரூபாயை நீங்கள் வட்டியாக ஈட்டலாம்.
மகளிர் கவுரவ சேமிப்புச் சான்றிதழ் கணக்கைத் தொடங்க தேவையான ஆவணங்கள்:
முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்: தேவையான அனைத்து விவரங்களையும் துல்லியமாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
பயனாளர்களுக்கான KYC படிவம்: KYC படிவத்தை நிரப்பவும்
அடையாளச் சான்று:
ஆதார் அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
ஓட்டுனர் உரிமம்
பான் கார்டு
முதலீடு: பணமாகவோ காசோலையாகவோ முதலீடு செய்யலாம்
முன்கூட்டியே பணத்த பெறுவதற்கான நிபந்தனைகள்:
ஆறு மாதங்களுக்குப் பிறகு மூடல்: கணக்கு துவங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு எந்தக் குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்காமல் மூடலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அசல் தொகைக்கு 5.5 சதவீத வட்டி விகிதம் மட்டுமே வழங்கப்படும்.