மேலும் அறிய

இன்றே கடைசி: எல்.ஐ.சி ஐபிஓ ஏலத்தில் இணைய உங்கள் பான் கார்டை இணைத்துவிட்டீர்களா?

பான் கார்ட் அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி 28 பிப்ரவரி 2022, அதாவது இன்றுடன் முடிவடைகிறது. 

லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ஐபிஓக்கள் ஏலத்துக்கு வரவிற்கும் நிலையில் ஏலத்தில் இணைய பாலிசிதாரர்கள் தங்களுடைய பான் கார்டை அப்டேட் செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். பான் கார்ட் அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி 28 பிப்ரவரி 2022, அதாவது இன்றுடன் முடிவடைகிறது. 

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசி செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை  ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. எனவே எல்ஐசி ஐபிஓ ஏலத்தில் இணைவது மற்றும் எல்ஐசி பங்குகளின் பலன்களை நீங்கள் பெற வேண்டும் என்றால், ஒவ்வொரு பாலிசிதாரரும் தங்களது பான் விபரங்களை கட்டாயம் சேர்த்திருக்க வேண்டும். இல்லாவிடில் எந்த பலனையும் நீங்கள் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பான் கார்டினை எல்ஐசியில் பாலிசியுடன் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

இணைப்பதற்கு என்ன தேவை?

பான் கார்டினை இணைப்பதற்கு உங்களிடம் சரியான டிமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும். தற்போது 8 கோடி டிமேட் கணக்குகளுடன் ஒப்பிடுகையில் எல்ஐசியில் மட்டும் 25 கோடி பாலிசிதாரர்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் வசிப்பவர்கள் பாலிசிதாரர் முன்பதிவு பகுதியின் கீழ் இந்த சலுகையில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் மற்றும் தள்ளுபடியைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பான் கார்டுடன் எல்ஐசி பாலிசி எண்ணை இணைப்பதுக் குறித்த வழிமுறையை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

முதலில் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள PAN registration என்ற பக்கத்தில் கிளிக் செய்ய வேண்டும்.

PAN, LIC பாலிசி எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட உங்கள் விவரங்களை வழங்க வேண்டும்.

இதனைப்பதிவு செய்த பிறகு கேப்சா எண்ணைக் குறிப்பிட்டு ஓகே செய்தால் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.

இந்த ஓடிபியை பதிவு செய்து சப்மிட் என்பதைப் பதிவிட வேண்டும்.

இறுதியில் பான் எண்ணும், பாலிசி எண்ணும் இணைக்கப்பட்டதாக திரையில் மெசேஜ் வரும்.

தற்போது பான்கார்டு எல்ஐசி பாலிசியுடன் இணைக்கப்பட்டிருக்கும் என்பதைச் சரிப்பார்க்க கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றவும்.

முதலில் எல்ஐசியின் இணையதளத்திற்குள் நுழைய வேண்டும்.

இதனையடுத்து அப்பக்கத்தில் பாலிசியின் ஆயுள் காப்பீட்டு எண்ணை உள்ளிடவும். பின்னர் உங்களது பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.

இப்போது PAN அட்டை எண்ணை உள்ளீடு செய்து, கேப்சா குறியீட்டை உள்ளீடு செய்யவேண்டும்.

இதனையடுத்து வரும் பக்கத்தில் உங்களது எல்ஐசி பாலிசி மற்றும் பான் இணைப்பு உங்களுக்குத் திரையில் தெரியவரும். எனவே மேற்கண்ட முறைகளில் எல்ஐசி பாலிசி மற்றும் பான் எண்ணை சுலபமாக உடனே இணைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்Doctors Issue : ’’போதிய மருத்துவர்கள் இல்ல..பெரிய தலைவலியா இருக்கு’’புலம்பும் அரசு மருத்துவர்Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Embed widget