மேலும் அறிய

ITR 2024: வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஐடிஆர்-1 படிவம் - யார் யார் இதை பயன்படுத்தக்கூடாது தெரியுமா?

Income Tax Return Filing ITR Forms: வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களில் யார் யாரெல்லாம், ஐடிஆர்-1 படிவத்தை பயன்படுத்தக் கூடாது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ITR Forms 2024: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் ஊதியதாரர்களில் பெரும்பாலானோர், ஐடிஆர்-1 படிவத்தை பயன்படுத்துகின்றனர்.

வருமான வரி கணக்கு தாக்கல் 2024:

நடப்பு நிதியாண்டு (FY 2023-24) இன்னும் 50 நாட்களில் முடிவடைகிறது. பொதுவாக, வருமான வரி விதிகளின்படி, ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு நீங்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்தால், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்காக ஐடிஆர் 1 (ITR-1) தொடங்கி ஐடிஆர் 7 என மொத்தம் 7 படிவங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதில், ஐடிஆர்-1 என்பது வருமான வரி தாக்கல் செய்யும் பெரும்பாலானவர்களால் தேர்வு செய்யப்படும் படிவமாகும். பொதுவாக, சம்பளம் வாங்குபவர்கள் அதைத் தேர்வு செய்கிறார்கள். ITR-1 படிவம் சஹாஜ் வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது.

ITR-1 படிவத்தை யார் பயன்படுத்தலாம்? (Who is eligible to file ITR-1 form?)

வழக்கமாக வரி செலுத்துவோர்களில் பெரும்பாலானோர் ஐடிஆர்-1 படிவம் மூலம் தங்கள் வருமானம் மற்றும் வரிப் விவரங்களை அரசிடம் சமர்பிக்கின்றனர். சம்பளம், ஈவுத்தொகை, வங்கி வட்டி, ஒரு வீட்டு சொத்து, விவசாயம் மூலம் ஆண்டு வருமானம் ரூ. 5000 (தனிநபர்) கொண்டிருப்பவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஐடிஆர் 1 படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ரூ. 50 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம்  கொண்ட வரி செலுத்துவோர் இந்தப் படிவத்தின் மூலம் வருமான விவரங்களை சமர்ப்பிக்கலாம்.

ITR-1 படிவத்தை யார் பயன்படுத்தக்கூடாது?  ‍‌(Who is not eligible to file ITR-1 form?)

  • வரி செலுத்துபவரின் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 50 லட்சத்துக்கு மேல் இருந்தால், ஐடிஆர்-1 படிவம் மூலம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யக் கூடாது.
  • மியூச்சுவல் ஃபண்டுகள், தங்கம், ஈக்விட்டி பங்குகள், பிற ஆதாரங்களில் வருமானம் ஈட்டுபவர்கள் ITR-1ஐத் தேர்வு செய்யக் கூடாது.
  • குதிரைப் பந்தயம், லாட்டரிகள், சட்டப்பூர்வ சூதாட்டம் போன்ற சேவைகள் மூலம் வருமானம் ஈட்டினால், அவர் ITR-1ஐ தாக்கல் செய்ய தகுதியற்றவர்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுச் சொத்துக்களில் இருந்து வருமானம் பெறுபவர்கள் ITR-1 படிவம் மூலம் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.
  • என்ஆர்ஐ (குடியுரிமை இல்லாத இந்தியர்) ஐடிஆர்-1 ஐ தாக்கல் செய்ய தகுதியற்றவர்.
  • வங்கியிலிருந்து பணத்தை எடுக்கும்போது, ​​வருமான வரிச் சட்டத்தின் 194N பிரிவின் கீழ் டிடிஎஸ் (மூலத்தில் வரிக் கழிக்கப்பட்டது) கழிக்கப்பட்டிருந்தால், அத்தகைய வரி செலுத்துவோர் ITR-1 படிவத்தைப் பயன்படுத்தக்கூடாது.
  • இந்து கூட்டுக்குடும்பம் குடும்பம் (HUF), நிறுவனங்கள் ITR-1ஐ தாக்கல் செய்யக்கூடாது.

தகுதி இல்லாதவர்கள் ITR-1 தாக்கல் செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ITR-1 படிவத்தை தாக்கல் செய்ய தகுதியில்லாத ஒருவர் அந்த படிவத்தின் மூலம் தனது வருமான விவரங்களை தவறுதலாக அறிவித்தால், அவருக்கு வருமான வரித்துறையின் நோட்டிஸ் வரக்கூடும். அதில், தவறான படிவம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டு இருக்கும். நோட்டீஸ் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் சரியான படிவத்தை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், முதலில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக்கணக்கு செல்லுபடியாகாது. அதன்பிறகு வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Embed widget