HDFC FD Interest | ஹேப்பி நியூஸ்..நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்கள் உயர்த்திய எச்டிஎப்சி வங்கி.. முழு விவரம்..
HDFC வங்கி சமீபத்தில் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான FD-க்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 14 முதல் அமலுக்கு வரும் என்று HDFC வங்கி இணையதளம் தெரிவித்துள்ளது.
HDFC வங்கி, ஃபிக்சட் டெப்பாசிட் (FD) வைத்திருப்பவர்களுக்கு வட்டி விகித உயர்வை அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய மாற்றங்களுக்கு பின், பல வங்கிகள் ஃபிக்சட் டெப்பாசிட் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. கொரோனா பிரச்சினை வந்த பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இப்போது சேமிப்பின் மீது அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். பணத்தை சேமிக்க நிறைய வழிகள் உள்ளன.
வங்கிகள் வாயிலான சேமிப்புகள் பெரும்பாலானோரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதுவும் ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு நிதித் திட்டங்களில் அதிகப் பேர் முதலீடு செய்கின்றனர். அங்கே அதிக லாபம் கிடைப்பதோடு, பணமும் பாதுகாப்பாக இருக்கும். ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னர் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்கின்றனர். வங்கிகளின் தற்போதைய வட்டி என்ன என்று பார்க்க வேண்டும். ஏனெனில், வங்கிகள் அடிக்கடி தங்களது வட்டி விகிதங்களை மாற்றியமைக்கின்றன.
HDFC வங்கி சமீபத்தில் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான FDகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 14 முதல் அமலுக்கு வரும் என்று HDFC வங்கி இணையதளம் தெரிவித்துள்ளது. தனியார் கடன் வழங்குபவர் 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை வைக்கும் FD களுக்கு 2.5 சதவீதம், 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை வைக்கும் FD க்களுக்கு 3 சதவீதம் மற்றும் 91 நாட்கள் முதல் ஆறு மாதங்கள் வரை 3.5 சதவீதம் வட்டியை வழங்குகிறது. ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் FDகளுக்கு, வட்டி விகிதம் 4.40 சதவீதமாக இருக்கும்.
ஒரு வருடத்திற்கு நிரந்தர வைப்புத் தொகையில் பணத்தைப் போடுகிறீர்கள் என்றால், வட்டி விகிதம் 5 சதவீதமாக இருக்கும். உங்கள் நிலையான வைப்புத் தொகையானது இரண்டு வருடங்கள் வரையிலான காலத்துக்கு அதே அளவு வட்டியைப் பெறும். இரண்டு ஆண்டுகளில் ஒரு நாள் முதல் மூன்று ஆண்டுகள் வரை நீளும் நீண்டகால நிலையான வைப்புகளுக்கு 5.30 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். பிப்ரவரி 14, 2022 முதல் HDFC வங்கியில் ரூ. 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் இதோ:
- 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.00 சதவீதம்
- 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.00 சதவீதம்
- 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
- 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
- 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
- 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
- 6 மாதங்கள் 1 நாட்கள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.90 சதவீதம்
- 9 மாதங்கள் 1 நாள் முதல் ஒரு வருடம் வரை: பொது மக்களுக்கு - 4.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.90 சதவீதம்
- 1 ஆண்டு: பொது மக்களுக்கு - 5.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.50 சதவீதம்
- 1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.50 சதவீதம்
- 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.70 சதவீதம்
- 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.45 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.95 சதவீதம்
- 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.35 சதவீதம்