நிதிநிலையில் சமநிலை.. Hdfc Life Click 2 Achieve திட்டம் மூலம் வருமான பற்றாக்குறையை போக்குங்கள்!
நிதி திட்டமிடலுக்கு ஆயுள் காப்பீடு அடித்தளமாக உள்ளது. பொருளாதார தடைகளை தாண்டி பாதுகாப்பை வழங்குகிறது.
தனிநபர் நிதிநிலையை பொறுத்தவரையில், வரவு செலவுத் திட்டத்தில் சம அளவு நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கருத்து குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, பொருளாதார ரீதியான சவால்களுக்கு மத்தியிலும் வருமான அடுக்குகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளின் பின்னணியிலும் வரவு செலவில் சமநிலையை கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நிதி ஸ்திரத்தன்மையில் ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம்:
தங்கள் நிதிநிலையை திறம்பட நிர்வகிக்க தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் முயற்சிப்பதால், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஆயுள் காப்பீடு முக்கிய பங்கு வகிக்கிறது. Hdfc Life Click 2 Achieve திட்டத்தின் மூலம் நிதிநிலையில் சமநிலையை நோக்கிய பயணம் பல்வேறு வருமானப் பின்னணியில் உள்ளவர்களுக்கு மிகவும் அணுகக்கூடியதாகவும் உறுதியானதாகவும் மாறும்.
நிதி திட்டமிடலுக்கு ஆயுள் காப்பீடு அடித்தளமாக உள்ளது. பொருளாதார தடைகளை தாண்டி பாதுகாப்பை வழங்குகிறது. இது வசதி படைத்தவர்களுக்கான ஒரு கருவி மட்டுமல்ல, அனைத்து வருமான நிலைகளிலும் உள்ள தனிநபர்கள் தங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் நிதிப் பாதுகாப்பின் அடித்தளத்தை உருவாக்குவதற்கும் ஒரு முக்கிய கருவியாகும்.
இதையும் படிக்க: Paytm: ஒரே பான் எண்ணை வைத்து 1000 கணக்குகள்! பேடிஎம் கதையை முடித்துவிட்ட ஆர்பிஐ - இதான் பிரச்னையே
தனிநபர்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல், பல்துறை சேமிப்புத் தீர்வுகளுடன் ஒருவரை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள திட்டம்தான் Hdfc Life Click 2 Achieve. சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் கட்டமைக்கப்பட்ட பாதையை வகுத்து தருவதால் நிதிநிலையை சமநிலைக்கு கொண்டு வருவதில் முக்கிய வழிகளில் ஒன்றாக ஆயுள் காப்பீடு விளங்குகிறது.
நிதி இலக்குகளுக்கு ஏற்ப திட்டத்தை வடிவமைக்கும் Hdfc Life Click 2 Achieve:
வாழ்க்கை நடத்துவதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் உலகில், ஒருவருடைய வருமான வரம்பைப் பொருட்படுத்தாமல், சேமிப்பில் ஒழுக்கமான அணுகுமுறையைக் கொண்டிருப்பது மிக முக்கியம். பாலிசிதாரர்களுக்கு பிரீமியம் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் பாலிசி காலத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மை, அதன் மூலம் அவர்களின் நிதித் திறன்கள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப திட்டத்தை வடிவமைத்து தருகிறது Hdfc Life Click 2 Achieve திட்டம்.
பல்வேறு வருமான அடுக்குகளைச் சேர்ந்த தனிநபர்கள், நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும் என்பதை இந்த திட்டம் உறுதிசெய்கிறது. நிதி விவேகம், மீண்டெழும் திறனை ஆகியவற்றை வளர்க்கும் கலாசாரத்தை இந்த திட்டம் ஊக்குவிக்கிறது. மேலும், எதிர்பாராத சூழ்நிலைகளில் நிதிப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குவதன் மூலம் வெவ்வேறு வருமானக் குழுக்களிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதில் ஆயுள் காப்பீடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
Hdfc Life Click 2 Achieve திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இறப்புப் பலன், பாலிசிதாரர் மரணம் அடையும்போது ஏற்படும் நிதி விளைவுகளிலிருந்து அவர்களின் குடும்பங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கிறது. சவாலான காலக்கட்டங்களில், கடன் சுமை மற்றும் செலவுகளைக் குறைக்கிறது.
கனவுகளை அடைய உதவும் ஆயுள் காப்பீடு:
வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுடன் தொடர்புடைய நிதி அபாயங்களைத் தணிப்பதன் மூலம், சமத்துவம் மற்றும் ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கிறது ஆயுள் காப்பீடு. நிதி பாதுகாப்பு இல்லையை என்ற அச்சம் இன்றி, அனைத்து தரப்பு மக்களும் தங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்களை அடைய ஆயுள் காப்பீடு உதவுகிறது.
HDFC Life Click 2 Achieve திட்டமானது, பலவிதமான நிதித் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறது. திட்டத்தின் பலன்களை வழங்குவதன் மூலம் உங்களுக்கு பல நன்மைகளை விளைவிக்கிறது.
1) குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பாலிசியின் காலத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்துடன் உத்தரவாதமான உடனடி வருமானத்தை வழங்க உதவும்.
2) பாலிசி தொகையை மொத்தமான தொகையாக பெறுவது, குறிப்பிட்ட காலத்திற்கு வருமானமாக பெறுவது, திருப்தி அல்லாத பட்சத்தில் பணத்தைத் திரும்பப் பெறுவது என பல்வேறு அம்சங்களுடன் உங்கள் திட்டத்தை வடிவமைக்கலாம்.
3) உங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பொருத்தமான டெத் பெனிபிட் (மரணம் அடைந்தால் தரப்படும் தொகை) ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம்.
4) உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு நீங்கள் பெற விரும்பும் வருமானத்தின் அளவைத் தீர்மானிக்கலாம்.
5) இறக்கும்போதும், ஆபத்தான நோயால் பாதிக்கப்படும்போதும், முழுமையான நிரந்தர இயலாமை ஏற்படும் போதும், நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தள்ளுபடி செய்யப்படும். எனவே, உங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து மன அமைதியை பெறுங்கள்.
இறுதியாக கூற வேண்டுமானால், நிதிநிலையில் சமநிலை என்ற கருத்து நிதி பரிவர்த்தனைகளை எல்லாம் தாண்டி செயல்படுகிறது. பொருளாதார ரீதியாக நல்வாழ்வுக்கான வாய்ப்புகள், வளங்கள் ஆகியவற்றை அனைவரும் சமமான அளவில் பெறுவதற்கான சமதளத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் இயங்குகிறது.
நிதித் திட்டமிடல் மற்றும் சேமிப்பிற்கான முழுமையான அணுகுமுறையை தனிநபர்களுக்கு HDFC Life Click 2 Achieve போன்ற ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் வழங்குவதன் மூலம் உந்து சக்தியாக விளங்குகிறது. HDFC Life Click 2 Achieve மூலம் தனிநபர்கள் தங்கள் வருமான அளவைப் பொருட்படுத்தாமல், பொருளாதார ரீதியாக மேம்படுவது, நிதி பாதுகாப்பை நோக்கி ஒரு பயணத்தைத் தொடங்கலாம். வரவு செலவுத் திட்ட நடைமுறைகளில் சமநிலையை வலுப்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு:
இது, கட்டணம் வாங்கிகொண்டு வெளியிடப்பட்ட கட்டுரையாகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ABP குழுமம் ஆதரிக்கவில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள், கூறப்பட்ட/சிறப்பிடப்பட்டவை போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம். அதன்படி, கவனமாக முடிவுகளை எடுக்க வாசகர்களை அறிவுறுத்துகிறோம்.
இதையும் படிக்க: Stock Market: எஸ் பேங்க், எல்.ஐ.சி. பங்கு மதிப்பு உயர்வு - 700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!