Paytm: 5% உயர்ந்த பங்கு மதிப்பு; சரிவிலிருந்து மீளுமா பேடிஎம்? இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!
Paytm: பேடிஎம் பங்கு மதிப்பு 5% உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக பேடிஎம் பேமன்ட் வங்கிக்கு தடை விதித்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்கு கடந்த வாரம் கடுமையான சரிவை சந்தித்தது. இந்நிலையில், இன்றைய வர்த்த நேரக தொடக்கத்தில் பேடிஎம் பங்குகள் சரிவுடன் இருந்த நிலையில், தற்போது 5% அதிகரித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 167. 48 அல்லது 0.23 % புள்ளிகள் உயர்ந்து 71,898 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 60.35 அல்லது 0.28% உயர்ந்து 21,832.05 ஆக வர்த்தகமாகியது.
பங்குச்சந்தை வர்த்தக நேரத்தில், பேடிஎம் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 5% அதிகரித்து ரூ.460-க்கு விற்பனை ஆகி வருகிறது. பேடிஎம்-ன் முதன்மை நிறுவனமான One97 Communications-ன் பங்கு மதிப்பு கடந்த வர்த்தக செசன்களில் 10% குறைந்து ரூ.438 ஆக மோசமாக சரிவை சந்தித்தது. இந்நிறுவனத்தின பங்கு மதிப்பு ரூ.761-ல் இருந்து கடந்த நான்கு சென்சன்களில் 40% வரை பங்கு மதிப்பு குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது பேடிஎம் பங்கு மதிப்பு உயர்திருப்பதால், அந்நிறுவனம் சரிவிலிருந்து மீளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
ஹெச்.டி.எஃப்.சி. லைப், பி.பி.சி.எல்., விப்ரோ, டி.சி.எஸ்., பாரதி ஏர்டெல், ஓன்.என்.ஜி.சி, மாருது சுசூகி, ஹெட்.சி.எல். டெக், இன்ஃபோசிஸ்,லார்சன், அதானி போர்ட்ஸ், டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ், டாடா மோட்டர்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஈச்சர் மோட்டர்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி,பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபினான்ஸ், அதானி என்டர்பிரைசிஸ், டாடா ஸ்டீல், சன் பார்மா, ஹெச்.யு.எல். ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
பவர்கிரிட், ஐ.டி.சி., பிரிட்டானியா, இந்தஸ்லேண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், என்.டி.பி.சி., ஹிண்டால்கோ, சிப்ளா, கோடாக் மஹிந்திரா, ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீன்ல், அப்பல்லோ மருத்துவமனை, க்ரேசியம், டைட்டன் கம்பெனி, கோல் இந்தியா,ஹீரோ மோட்டர்கார்ப் ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
வரும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு, வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் மேலும் டெபாசிட் செய்யவோ, பண பரிமாற்றம் செய்யவோ, டாப் அப் செய்யவோ அனுமதிக்கப்படாது.
ஆனால், சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் ஏற்கனவே இருக்கும் பணத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் UPI வசதியை பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 29 அல்லது அதற்கு முன் தொடங்கப்பட்ட பரிவர்த்தனைகளும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும், மேலும் எந்த பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.