Paytm Lite : Pin நம்பர் இல்லாமல் டிஜிட்டல் பேமண்ட்: எப்படி சாத்தியம்? புதிய சேவையை அறிமுகம் செய்த Paytm
யுபிஐ(UPI) பின் நம்பர் இல்லாமல் பணம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவையை paytm அறிமுகம் செய்துள்ளது.
Paytm Lite : யுபிஐ பின் நம்பர் இல்லாமல் பணம் பரிவர்த்தனை சேவையை paytm அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணபரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது.
இணையத்தில் பொருட்களை வாங்குதல், பண பரிமாற்றம் மேற்கொள்ளுதல், சில்லறை வணிக கடைகளில் கூட பண பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பண பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
யுபிஐ லைட்
இந்நிலையில், யுபிஐ பின் (upi pin) இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்வது குறித்து paytm புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அது என்னவென்று பார்த்தால் பொதுவாக UPI மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் பணப்பரிவரித்தனை மேற்கொள்ளும் முன் பயணர் அதற்கான 4 அல்லது 6 இலக்க எண்களை உள்ளிட வேண்டும்.
அவசர தேவைக்காக பொதுவெளியில் பணம் செலுத்தும்போது சிலர் pin நம்பரை கவனிக்கவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சிரமங்களை தவிர்க்கவும், விரைவாக பயனர்கள் பணத்தை பரிவர்த்தனை செய்ய ஏதுவாக paytm lite அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் சிறு கடைகளில் ரூ.200 வரையில் பின் நம்பர் இல்லாமல் பணத்தை விரைவாக செலுத்த முடியும்.
ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. என்னவென்றால் தற்போது paytm upi வாடிக்கையாளர்கள் மட்டுமே யுபிஐ லைட் கணக்குகளை அமைக்க முடியும். முதலில் பேடிஎம் வைத்திருக்கும் பயணர்கள் உங்கள் மொபைலில் யுபிஐ லைட்டுக்கான ஆதரவை அனுமதிக்க வேண்டும். அதன்பின், யுபிஐ லைட் வாலாட்டில் உள்ள பணத்தை பின் நம்பர் இல்லாமல் உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றலாம். இந்த யுபிஐ லைட் மூலம் ஒரே நாளில் ரூ.4,000 வரை பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேடிஎம் செயலிக்கு அதிகபட்ச வரம்பு 1 லட்சம் வரை உள்ளது. இது, வங்கி கணக்கை பொறுத்து மாறுபடலாம். இதில் ஒரு நாளைக்கு 20 பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு ஏற்பவும் மாறுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Myanmar : மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உதவிட, மியான்மர் அரசு கொண்டுவந்த அதிரடி..