Baba Ramdev: ”ராமர் தான் இஸ்லாமியர்களின் மூதாதையர்”- பாபா ராம்தேவ் பேச்சு, வக்பு சட்டத்திற்கு ஆதரவு
Baba Ramdev: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாபா ராம்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Baba Ramdev: அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மத அமைப்புகளையும் வலுப்படுத்தும் என பாபா ராம்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வக்பு திருத்த சட்டத்திற்கு பாபா ராம்தேவ் ஆதரவு:
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாபா ராம்தேவ் , வக்பு திருத்த மசோதா தொடர்பாக யோகா குரு பாபா ராம்தேவ் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி பேசுகையில், “இந்தியாவில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு ஒரே அரசியலமைப்பு உள்ளது, அதாவது அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அமைப்பு உள்ளது” என்று தெரிவித்தார். ராம நவமியை முன்னிட்டு, திவ்ய யோகா மந்திர் (அறக்கட்டளை), கிருபாலு பாக் ஆசிரமம் மற்றும் திவ்ய யோகா மந்திர் ராம்முல்க் தர்பார் ஆகியவை இணைக்கப்பட்டன. திவ்ய யோகா மந்திர் ராம் முல்க் தர்பார் பதஞ்சலி யோகபீடத்துடன் இணைந்துள்ளது. அதே நிகழ்ச்சியின் போது பத்திரிகையாளர்கள் வக்பு திருத்த மசோதா தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
”ஒரே அரசியலமைப்பு”
வக்பு சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராம்தேவ், "இந்தியா முழுவதும், இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் என அனைவருக்கும் ஒரே அரசியலமைப்பு உள்ளது. வக்பு சட்டம் இயற்றப்படுவது இந்த அமைப்பை வலுப்படுத்தும். வக்பு சட்டம் இயற்றப்படாவிட்டால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தனித்தனி வாரியங்களை உருவாக்கக் கோருவார்கள்" என்றார். சில அரசியல் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக வக்பு சட்டத்தை எதிர்க்கின்றன என கூறிய ராம்தேவ், உத்தரகண்ட் அரசு கிராமங்களின் பெயர்களை மாற்றியதற்கும் அவர் ஆதரவளித்தார்.
ராமர் தங்கள் மூதாதையர் என்பதை இஸ்லாமியர்கள் அறிவார்கள்: பாபா ராம்தேவ்
மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலங்கள் மீதான தடை நீக்கப்பட்டது குறித்து ராம்தேவ் கூறுகையில், "வாக்கு வங்கிகளை அதிகரிப்பதற்காக அரசியல் நோக்கத்திற்காக இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ராம நவமி, ஜன்மாஷ்டமி மற்றும் ஈத் போன்ற மதப் பண்டிகைகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது. இந்தியா சனாதன பூமி, ராமர், கிருஷ்ணர், அனுமன், சிவன் ஆகியோரின் பூமி. இங்கு அனைவருக்கும் மரியாதை உண்டு. யாரும் யாரையும் வெறுக்க வேண்டாம். இந்துத்துவா யாரையும் வெறுக்கவில்லை. இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையையும் மதத்தையும் பின்பற்ற வேண்டும், ஆனால் ராமர் தங்கள் மூதாதையர் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்" என குறிப்பிட்டார்.
அமைப்புகளின் இணைப்பு:
அமைப்புகளின் இணைப்பு குறித்து சுவாமி ராம்தேவ் கூறுகையில், ”முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சன்யாசம் பெற்று எங்கள் நிறுவனத்திற்கு திவ்ய யோகா மந்திர் (அறக்கட்டளை) என்று பெயரிட்டோம். பின்னர் யோகேஷ்வர் சுவாமி ராம் லால் ஜியின் நிறுவனம் திவ்ய யோகா மந்திர் ராம்முல்க் தர்பார் ஏற்கனவே உள்ளது என்பதை அறிந்தோம். இன்று இரண்டு நிறுவனங்களும் இணைந்திருப்பது ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வு. யோகா பாரம்பரியத்தை அப்படியே வைத்திருக்க, யோகாச்சாரியார் சுவாமி லால் மகாராஜ் ராம நவமியின் புனிதமான சந்தர்ப்பத்தில் பதஞ்சலி யோகபீடத்திற்கு இந்தப் பிரசாதத்தை வழங்கியுள்ளார்” என விளக்கமளித்தார்.
ராம்தேவ் பாராட்டிய சுவாமி லால் மகாராஜ்
நிகழ்ச்சியில், பதஞ்சலி யோகபீடத்தின் பொதுச் செயலாளர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா, அனைத்து நாட்டு மக்களுக்கும் ராம நவமி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் படைப்பதற்கும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் இணைந்து பணியாற்ற, நமது வாழ்க்கை, ஆற்றல், சேவைப் பணி மற்றும் உணர்ச்சிகளில் ராமர் விழித்தெழுந்திருக்க வேண்டும் என்று கூறினார். இதற்கிடையில், ஒவ்வொரு வீட்டிலும் யோகாவை நிலைநாட்ட சுவாமி ராம்தேவ் மகாராஜ் செய்த பணிகளை, இதற்கு முன்பு யாரும் செய்ததில்லை, எதிர்காலத்திலும் யாராலும் செய்ய முடியாது என்று யோகாச்சார்யா சுவாமி லால் மகாராஜ் தெரிவித்தார்.

