மேலும் அறிய

Share market: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை;400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!

Share market : இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Share Market Opening Bell: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்  329.69 அல்லது 0.54% புள்ளிகள் உயர்ந்து 61,439.23 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 105.75  அல்லது 0.59% புள்ளிகள் சரிந்து 18,177.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.

இந்தஸ்லேண் வங்கி, பஜார்ஜ், ஆட்டோ, பவர்கிரிட், கோடாக் வங்கி, ஹிண்டொலேண்ட் உள்ளிட்ட வங்கிகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

இந்தஸ்லேண்ட் வங்கி, பஜார்ஜ் ஃபின்சர்வ், கோடாக் மஹிந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பவர்கிட் கார்ப்ரேசன், பஜார்ஜ் ஆட்டோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, டைட்டன் கம்பெனி, டாடா கன்ஸ்யூமர், ரிலையன்ஸ்,மாருதி சுசூகி, பாரத் பெட்ரோலியம், ஐ.சி.சி. ,பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ், ஆயில் அண்ட் நேட்சுரல் கார்ப்ரேசேன், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.

நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

கோல் இந்தியா, சன் பார்மா, லார்சன் அண்ட் டர்போ, அதானி போர்ட், ஸ்பெசல். சிப்ளா, டாக்டர். ரெட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம்:

அந்த விதத்தில், பங்கு சந்தையில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் தற்போது மெல்ல மெல்ல தெரிய வருகிறது. பங்கு சந்தையில் மின்னணு வடிவத்தில் பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்ய டிமேட் கணக்குகளே அதிகம் பயன்படுகிறது. எனவே, பங்கு சந்தை தரகர்கள் ஒவ்வொரு மாதமும் புதிய டிமேட் கணக்குகளைத் திறந்து வருகின்றனர். 

ஆனால், அதே நேரத்தில், பங்கு சந்தையில் பல மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் பழைய வாடிக்கையாளர்கள், பங்கு சந்தையில் தொடர முடியாமல் சவால்களை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக, கடந்த 9 மாதங்களில் பங்கு சந்தையில் இருந்து 53 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என தேசிய பங்கு சந்தையின் தரவுகள் வழியாக தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து 9ஆவது மாதமாக, தேசிய பங்கு சந்தையின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தேசிய பங்கு சந்தையில் 3.8 கோடி முதலீட்டாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 53 லட்சம் பேர் வெளியேறி உள்ளதால் அந்த எண்ணிக்கை 3.27 கோடியாக குறைந்துள்ளது.

இதை தவிர்த்து, பங்கு சந்தையில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு மூன்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில், பங்கு சந்தையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், தற்போது, பங்கு சந்தையில் மக்கள் வர்த்தகம் செய்வது ஒப்பிட்டளவில் குறைந்துள்ளது.

அறிகுறிகள்:

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு நிதியாண்டில், சில்லறை விற்பனை 49,200 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. 2021-22 நிதியாண்டில், சில்லறை விற்பனை 1.65 லட்சம் கோடி ரூபாயாகவும் 2020-21 நிதியாண்டில் 68,400 கோடி ரூபாயாகவும் இருந்தது.

மார்ச் 2023இல் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் தினசரி சராசரி வருவாய் 29% குறைந்து ரூ.23,700 கோடியாக பதிவானது.

கடைசியாக, புதிய டிமேட் கணக்குகள் பதிவு செய்யப்படும்  வேகம் குறைந்து வருகிறது. சேர்க்கப்பட்ட புதிய கணக்குகளின் எண்ணிக்கை, மாதந்தோறும் 8% குறைந்து 19 லட்சமாக உள்ளது.

இதற்கு எல்லாம் முக்கிய காரணம், கொரோனா பெருந்தொற்று என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், வீட்டில் இருந்து பணிபுரியும் முறை அதிகம் கடைபிடிக்கப்பட்டதால் இளைஞர்களுக்கு பங்கு சந்தை கவர்ச்சிகரமாக தென்பட்டதாகவும் ஆனால், தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் போக்கு குறைந்து வருவதால் பங்கு சந்தை மீது இளைஞர்களின் ஆர்வம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


 

 


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..
Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..
Rule Change Jan 1st 2025: ஜிஎஸ்டி, மொபைல் டேட்டா, விசா..! இனி எல்லாமே புதுசு - ஜன.1, 2025 முதல் இத்தனை புதிய விதிகளா?
Rule Change Jan 1st 2025: ஜிஎஸ்டி, மொபைல் டேட்டா, விசா..! இனி எல்லாமே புதுசு - ஜன.1, 2025 முதல் இத்தனை புதிய விதிகளா?
புகைப்படக்காரர்களுக்கு ஃபிளையிங் கிஸ்... செலிபிரிட்டி போல் நடந்துகொள்ளும் ஆலியா பட் மகள்...
புகைப்படக்காரர்களுக்கு ஃபிளையிங் கிஸ்... செலிபிரிட்டி போல் நடந்துகொள்ளும் ஆலியா பட் மகள்...
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Embed widget