மேலும் அறிய

Share market : சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை; 300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்..

Share market :இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

Share Market Opening Bell: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்  366.42 அல்லது 0.51% புள்ளிகள் சரிந்து 61,4267.97 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 99.00  அல்லது 0.47% புள்ளிகள் சரிந்து 18,168.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, அதானி எண்டர்பிரைசர்ஸ், லார்சன் உள்ளிட்ட பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

ஐ.சி.சி.ஐ., ஆக்ஸிஸ் வங்கி, டைட்டன் கம்பெனி, லார்சன் அண்ட் டர்போ, அல்ட்ராடெக் சிமெண்ட், பாரத ஸ்டெட் வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, மாருதி சுசூகி, கொடாக் மகேந்திரா வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரன்ஸ், நெஸ்லெ, பஜார்ஜ் ஃபினான்ஸ், பிரிட்டானியா, அதானி போர்ட்ஸ், டாடா மோட்டர்ஸ், மஹிந்திரா & ம்ஹிந்திரா, ரிலையன்ஸ், எசியன் பெயின், பாரத் பெட்ரோலியம், பவர்கிரிட் நிறுவனம், அப்பல்லோ மருத்துவமனை, ஹிந்துஸ்தான் யுனிலீவர், க்ரெசியம் இண்டஸ்ட்ரீஸ்.உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.

நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

ஹெச்,டி,எஃப்.சி. வங்கி, டாட ஸ்டீல், என்.டி.பி.சி., பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஜெ.எஸ்.டபுள்யு., விப்ரோ, சன் பார்மா, டெக் மஹிந்திரா, கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம்:

அந்த விதத்தில், பங்கு சந்தையில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம் தற்போது மெல்ல மெல்ல தெரிய வருகிறது. பங்கு சந்தையில் மின்னணு வடிவத்தில் பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்ய டிமேட் கணக்குகளே அதிகம் பயன்படுகிறது. எனவே, பங்கு சந்தை தரகர்கள் ஒவ்வொரு மாதமும் புதிய டிமேட் கணக்குகளைத் திறந்து வருகின்றனர். 

ஆனால், அதே நேரத்தில், பங்கு சந்தையில் பல மாதங்களாக நஷ்டத்தை சந்தித்து வரும் பழைய வாடிக்கையாளர்கள், பங்கு சந்தையில் தொடர முடியாமல் சவால்களை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக, கடந்த 9 மாதங்களில் பங்கு சந்தையில் இருந்து 53 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர் என தேசிய பங்கு சந்தையின் தரவுகள் வழியாக தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து 9ஆவது மாதமாக, தேசிய பங்கு சந்தையின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தேசிய பங்கு சந்தையில் 3.8 கோடி முதலீட்டாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 53 லட்சம் பேர் வெளியேறி உள்ளதால் அந்த எண்ணிக்கை 3.27 கோடியாக குறைந்துள்ளது.

இதை தவிர்த்து, பங்கு சந்தையில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு மூன்று அறிகுறிகள் தென்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில், பங்கு சந்தையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், தற்போது, பங்கு சந்தையில் மக்கள் வர்த்தகம் செய்வது ஒப்பிட்டளவில் குறைந்துள்ளது.

அறிகுறிகள்:

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு நிதியாண்டில், சில்லறை விற்பனை 49,200 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. 2021-22 நிதியாண்டில், சில்லறை விற்பனை 1.65 லட்சம் கோடி ரூபாயாகவும் 2020-21 நிதியாண்டில் 68,400 கோடி ரூபாயாகவும் இருந்தது.

மார்ச் 2023இல் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் தினசரி சராசரி வருவாய் 29% குறைந்து ரூ.23,700 கோடியாக பதிவானது.

கடைசியாக, புதிய டிமேட் கணக்குகள் பதிவு செய்யப்படும்  வேகம் குறைந்து வருகிறது. சேர்க்கப்பட்ட புதிய கணக்குகளின் எண்ணிக்கை, மாதந்தோறும் 8% குறைந்து 19 லட்சமாக உள்ளது.

இதற்கு எல்லாம் முக்கிய காரணம், கொரோனா பெருந்தொற்று என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், வீட்டில் இருந்து பணிபுரியும் முறை அதிகம் கடைபிடிக்கப்பட்டதால் இளைஞர்களுக்கு பங்கு சந்தை கவர்ச்சிகரமாக தென்பட்டதாகவும் ஆனால், தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் போக்கு குறைந்து வருவதால் பங்கு சந்தை மீது இளைஞர்களின் ஆர்வம் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


மேலும் வாசிக்க..

IIT Madras Recruitment 2023: சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

Theerkadarishi Review: எதிர்காலத்தை கணிப்பவனா? .. இல்லை முடிப்பவனா? - தீர்க்கதரிசி படத்தின் விமர்சனம் இதோ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளது குடும்ப வாரிசு அரசியல் அல்ல" - கொளத்தூர் மணி
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளது குடும்ப வாரிசு அரசியல் அல்ல" - கொளத்தூர் மணி
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து- துளிர்விடும் நம்பிக்கை
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
அஷிரா சில்க்ஸின் அசத்தல் கலெக்ஷன்ஸ் அறிமுகம்.. ஷாப்பிங் போக தயாரா?
அஷிரா சில்க்ஸின் அசத்தல் கலெக்ஷன்ஸ் அறிமுகம்.. ஷாப்பிங் போக தயாரா?
Pawan Kalyan : லட்டு விஷயத்தை விடுங்கள்... யோகிபாபு நடிப்பை பவன் கல்யாண் பாராட்டியதை பாருங்கள்
Pawan Kalyan : லட்டு விஷயத்தை விடுங்கள்... யோகிபாபு நடிப்பை பவன் கல்யாண் பாராட்டியதை பாருங்கள்
Navratri Recipe:நவராத்திரி விழாக்கால ஸ்பெஷல் - இனிப்பு வகைகள் செய்முறை இதோ!
நவராத்திரி விழாக்கால ஸ்பெஷல் - இனிப்பு வகைகள் செய்முறை இதோ!
Embed widget