(Source: ECI/ABP News/ABP Majha)
New Tax Regime: 15 லட்சம் வருமானம் பெறுபவர்கள் கவனத்துக்கு... நீங்கள் கட்டவேண்டிய வரி இதுதான்!
ரூ.15 - 20 லட்சம் வருமானம் உள்ள தனி நபர்களுக்கு வரிச்சுமை எவ்வளவு குறைகிறது என்பதைப் பார்க்கலாம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் தொடர்ந்து நான்காவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். அப்போது பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.
இறுதியாக, பொதுமக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்சவரம்பு தொடர்பான அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், பழைய வருமான வரித் திட்டத்தில் 6 பிரிவுகளாக இருந்த வரிவிதிப்பு முறை, புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தில் 5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம்:
புதிய வருமான வரி திட்டம் மூலம், தனிநபர் ஒருவர் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்தை வருவாயாக கொண்டிருந்தால், அவர் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.2.5 லட்சம் வரையில் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அது 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வரிவிதிப்பு முறை:
ஆண்டு வருமானம் | வருமான வரி சதவீதம் |
3 - 6 லட்சம் | 5 % |
6 - 9 லட்சம் | 10 % |
9 - 12 லட்சம் | 15 % |
12 - 15 லட்சம் | 20 % |
15 லட்சத்துக்கு மேல் | 30 % |
15 லட்சம் வருமானமீட்டுபவர்கள் கவனத்துக்கு
இந்நிலையில், ரூ.15 லட்சம் வருமானம் உள்ள தனிநபர்களுக்கு வரிச்சுமை எவ்வளவு குறைகிறது என்பதைப் பார்க்கலாம்
முன்னதாக 15 லட்சம் வருமானம் கொண்ட தனி நபர்கள் புதிய வரிக் கட்டமைப்பின் கீழ் ரூ.1.87 லட்சம் செலுத்த வேண்டியிருந்த நிலையில், தற்போது ரூ.1.5 லட்சம் வரியாகக் குறைந்துள்ளது.
இது 15 - 20 லட்சம் வரை வருமானமீட்டும் தனி நபர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
An individual with income of Rs 15 lakh will have to pay Rs 1.5 lakh tax down from Rs 1.87 lakh under new tax structure: FM
— Press Trust of India (@PTI_News) February 1, 2023
மேலும், பொதுவாக 37 சதவிகிதம் அளவிற்கு இருந்த சர்சார்ஜ் விகிதம், தற்போது 25 சதவிகிதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பழைய வருமான வரி விதிப்பு திட்டத்தின் மூலம், ரூ.5 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்டவர்கள், உரிய ஆவணங்களை செலுத்துவதன் மூலம் முழு வரிக் கழிவு (Tax rebate) பெற்றனர். தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய வருமான வரி விதிப்பு திட்டத்தின் மூலம், ரூ.7 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்டவர்களும், உரிய ஆவணங்களை செலுத்துவதன் மூலம், வரி விலக்கு பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.