JioBlackrock Flexi Cap: நாளை இறுதி! இந்தியாவின் முதல் AI மனித மேலாண்மை ஃப்ளெக்ஸி-கேப் ஃபண்ட்: முதலீடு செய்ய தயாரா?
JioBlackrock Flexi Cap Fund Details: "இந்தியாவின் முதல் AI-மனித மேலாண்மை ஃப்ளெக்ஸி-கேப் நிதியான JioBlackrock Flexi Cap Fund NFO-க்கான சந்தா காலக்கெடு, நாளையுடன் முடிவடைகிறது"

ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் (JioBlackrock Flexi Cap Fund) அதன் முதல் ஆக்டிவ் ஈக்விட்டி ஃபண்டை வெளியிட்டுள்ளது. ஃப்ளெக்ஸி- கேப் ஃபண்டைத் தொடங்க உள்ளது. ஜியோ பிளாக்ராக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் செப்டம்பர் 23 - ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 7 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதன்மூலம் ஜியோ பிளாக்ராக் ப்ளக்சி கேப் ஃபண்ட் (JioBlackrock Flexi Cap Fund NFO) நாளையுடன் முடிவடைய உள்ளது.
குறைந்தபட்ச முதலீடு தொகை என்ன ?
ஜியோ பிளாக்ராக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் மூன்று வகையில் முதலீடு செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் ஒரு ஒப்பன் எண்டாட் ஃபண்டாகும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜியோ பிளாக்ராக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (JioBlackrock Flexi Cap Fund NFO)-க்கு விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச தொகை ₹ 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜியோ பிளாக்ராக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டித் முதலீட்டார்கள் இந்த திட்டத்தில், SIP முறையில் அல்லது ஒரு முறை முன்கூட்டியே பணம் செலுத்துவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் முதல் முறை
இது வகையான டைனமிக் ஈக்விட்டி திட்டமாகும். இந்த திட்டத்தின் முதலீட்டு நோக்கம், சந்தை மூலதனம் முழுவதும் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான முதலீடு செய்வதன் மூலம் நீண்டகால மூலதன மதிப்பை உருவாக்குவதாகும். இந்தியாவில் முதல்முறையாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு AI-மனித மேலாண்மை ஃப்ளெக்ஸி-கேப் திட்டமாகும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் AI அம்சம், ஃபண்ட் மேலாளர்களுக்குச் சரியான நேரத்தில் லார்ஜ்-கேப், மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகளில் முதலீட்டைச் சமன் செய்ய (rebalance) உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபண்ட், விதி அடிப்படையிலான (rule-based), தரவு உந்துதல் (data-driven) அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.
ஜியோ பிளாக்ராக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் 0.50% (மிகக் குறைந்த செலவு விகிதம்) செலவு விகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபத்து கட்டுப்படுத்துவதற்கு பென்ச்-அவேர் உத்தி பின்பற்றப்பட உள்ளது. பல பங்குகளில் சிறிய மற்றும் புத்திசாலித்தனமான நிஃப்ட்டி 50 வெல்லவும், இதன் நோக்கமாக இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
யாருக்கு ஏற்றது?
நீண்ட கால மூலதன உயர்வையும், வெவ்வேறு சந்தை மூலதனங்களில் (market capitalisation) முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும், மிக அதிக இடர் தாங்கும் திறன் (very high risk appetite) கொண்ட முதலீட்டாளர்களுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் கற்றல் மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன், திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்க முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த உள்ளடக்கத்தின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளால் ஏற்படும் எந்தவொரு நிதி இழப்புக்கும் ஆசிரியரும் வெளியீட்டாளரும் வருமானத்தை உத்தரவாதம் செய்யவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டார்கள். உங்களுக்கென்ற தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கு தகுதிவாய்ந்த நிதி ஆலோசகரை அணுகவும்.




















