MSME Loan: ஒரு மணி நேரத்தில் ரூ.5 கோடி வரை கடன் - ரூ.1-க்கும் குறைவான வட்டி, சொந்த தொழில், யாருக்கு ஜாக்பாட்?
MSME Loan Scheme 2025: சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடனுதவி திட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

MSME Loan Scheme 2025: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே, ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளதும்.
MSME நிறுவனங்களுக்கு கடனுதவி:
இந்திய இளைஞர்கள் மத்தியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கருத்தை காட்டிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அண்மைக்காலமாக மேலோங்கி உள்ளது. இதன் காரணமாக தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேநேரம், எந்தவொரு தொழிலுக்கும் நிதியுதவி என்பது சில நேரங்களில் அவசியமாகிறது. இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர (MSME) நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக, இந்தியாவின்வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க தரப்பில் பல நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
MSME கடனுதவிக்கான தகுதிகள்:
- நிறுவனம் வர்த்தகம், உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் ஈடுபட்டு இருக்க வேண்டும்
- நிறுவனத்தின் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்
- வணிகங்கள் நிதி ஸ்திரத்தன்மையுடன் கூடிய நல்ல திருப்பிச் செலுத்தும் வரலாற்றைக் கொண்டிருக்க வேண்டும்
- வணிகங்கள் எந்தவொரு நிதி நிறுவனத்திடமிருந்தும் இதற்கு முன்பு எந்தக் கடனையும் திருப்பிச் செலுத்தாமல் இருக்கக்கூடாது
- கடன் பெற விண்ணப்பதாரர் அல்லது வணிகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 65
- விண்ணப்பதாரர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் நிறுவனம் அல்லது நிறுவனத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் மற்றும் வணிகத் துறையில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
யார் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்:
- பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள்
- பப்லிக் லிமிடெட் நிறுவனங்கள்
- தனிநபருக்கு சொந்தமான நிறுவனங்கள்
- கூட்டாளிகள் இணைந்து அமைத்த நிறுவனங்கள்
MSME கடனுதவிக்கான வட்டி விவரங்கள்:
வேலை கடன்கள், முத்ரா கடன், பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் கடனுதவி வழங்கப்படுகிறது. சில ஆயிரங்களில் தொடங்கி ரூ.5 கோடி வரையிலும் இந்த கடனுதவி நீள்கிறது. இந்த MSME கடன்களுக்காக ஒவ்வொரு வங்கியிலும் வசூலிக்கப்படும் வட்டி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
| வங்கிகள் | கடனுக்கான வட்டி விகிதம் |
| இந்தியன் வங்கி | 8.80 சதவிகிதம் முதல் |
| செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா | 8.25 சதவிகிதம் முதல் |
| பஞ்சாப் நேஷனல் வங்கி | 9.60 சதவிகிதம் முதல் |
| ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா | 8.0 சதவிகிதம் முதல் |
| கனரா பேங்க் | 9.20 சதவிகிதம் முதல் |
| UCO பேங்க் | 9.10 சதவிகிதம் முதல் |
| யுனியன் பேங்க் ஆஃப் இந்தியா | 10.95 சதவிகிதம் முதல் |
| லெண்டிங்கார்ட் | மாத்திற்கு 1.25 சதவிகிதம் முதல் |
| மஹிந்திரா ஃபைனான்ஸ் | 7.20 சதவிகிதம் முதல் |
| முத்தூர் ஃபின்கார்ப் | 18 சதவிகிதம் முதல் |
MSME கடனுதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
MSME கடனுதவிக்கு பயனாளர்கள் ஆன்லைன் வாயிலாக மற்றும் நேரடியாக என இரண்டு விதங்களிலும் விண்ணப்பிக்கலாம். அதன்படி, ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- கடனுதவி வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் இணையதள பக்கத்தை அணுகவும்
- கடனுதவிக்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்கவும்
- படிவம் தொடர்பாக வங்கியின் பிரதிநிதி உங்களை அணுகி பேசுவார்
- தேவையான ஆவனங்களை சமர்பிக்கும்படி பிரதிநிதி உங்களுக்கு வலியுறுத்துவார்
- ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு கடனுதவிக்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்
- கடன் நடைமுறையை பூர்த்தி செய்ய ஒப்பந்தத்தை பயனாளருக்கு வங்கி அனுப்பும்
- பயனர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்
இதுதவிர பயனாளர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களை நேரடியாக அணுகியும், கடனுதவி திட்டங்களை செயல்படுத்தலாம்.
1 மணி நேரத்தில் ரூ.5 கோடி வரை கடன்:
MSME நிறுவனங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட்டாலும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வெறும் 59 நிமிடங்களில் கடனுதவி வழங்கும் அரசின் திட்டம் மிகவும் சுவாரஸ்யமானதாகும். முற்றிலும் ஆன்லைன் அடிப்படையிலான இந்த திட்டத்தில், டெர்ம் லோன், வர்க்கிங் கேபிடல் லோன் மற்றும் முத்ரா லோன் ஆகியவற்றை ரூ.5 கோடி வரை பெறலாம். பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளில் இந்த நடைமுறை அடிப்படையில் கடனுதவி வழங்கப்படுகிறது.
MSME கடனுதவியின் பலன்கள்:
- புதிய தொழிலை தொடங்கவும், ஏற்கனவே இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவும் உதவும்
- தொழிற்சாலை, இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்யவும் இந்த கடன் உதவும்
- தொழிற்சாலைக்கான நிலத்தை வாங்கவும் திட்டத்தை பயன்படுத்தலாம்
- பொருட்களை சந்தைப்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் கடனுதவியை நாடலாம்
- வியாபாரத்தில் ஏற்படும் தாமதத்தை தடுக்கவும் இந்த கடனுதவி உதவும்





















