1994-ல் தாத்தா வாங்கிய எஸ்.பி.ஐ. பங்கு! இப்போது அதன் மதிப்பு எவ்வளவு? குஷியில் பேரன்
எஸ்.பி.ஐ. வங்கியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பங்கு வாங்கிய நபர் அது தொடர்பாக நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைதலத்தில் போஸ்ட் செய்துள்ளார்.
சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைநல மருத்துவர் டான்மே மோட்டிவாலா (Tanmay Motiwal), அவருடைய தாத்தா 1994-ல் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.500 மதிப்பில் பங்கு வாங்கியிருக்கிறார். இப்போது, அதன் மதிப்பு அதிகரித்திருபதை மகிழ்ச்சியுடன் 'The power of holding equity' எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய பங்கு:
டான்மேவின் தாத்தா 1994-ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியின் ஐ.பி.ஓ. பங்கு விற்பனையின்போது ரூ.500-க்கு பங்கு வாங்கியிருக்கிறார். முப்பதாண்டுகளுக்கு; பிறகு, டான்மேவிற்கு தனது தாத்தாவின் பங்கு முதலீடு தொடர்பான ஆவணம் கிடைத்துள்ளது. பங்கு வாங்கியதற்காக, எஸ்.பி.ஐ. சான்றிதழ் வழங்கியுள்ளது. அதில், பங்குகள் இன்னும் விற்பனை செய்யப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய மதிப்பு என்ன?
இது தொடர்பாக, டான்மே தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதில், ஒருவர் இப்போது பங்கு முதலீட்டில் எவ்வளவு பணம் கிடைத்திருக்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு டான்மே,’அதன்படி, 30 ஆண்டுகளில் அதன் பங்கு முதலீடு செய்ததன் மூலம் ரூ.3.75 லட்சம் (excluding dividends) என்று பதிலளித்துள்ளார்.
பங்குச்சந்தை, மியூட்சுவல் ஃப்ண்ட் உள்ளிட்டவற்றில் நிதி முதலீடு செய்வது எவ்வளவு நல்லது என்பது தொடர்பாக டான்மே தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பங்குகளை வாங்குவது விற்பனை செய்வது உள்ளிட்டவற்றில் தெளிவாகவும் நம்பிக்கையுள்ளவற்றை ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் சிலர் அறிவுரை கமெண்ட்களையும் காண முடிந்தது.