மேலும் அறிய

மலபார் கோல்டு நிறுவனத்திற்கு இந்தியா கோல்டு கான்ஃபெரன்ஸ் ரெஸ்பான்சிபிள் ஜுவல்லரி ஹவுஸ் விருது

இந்தியாவின் பிரபல தங்கநகை நிறுவனமான மலபார் கோல்டு இந்தியா கோல்டு கான்ஃபெரன்ஸ் (IGC) ரெஸ்பான்சிபிள் ஜுவல்லரி ஹவுஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்-க்கு 2023 - 24-ஆம் ஆண்டுக்கான இந்தியா கோல்டு கான்ஃபெரன்ஸ் (IGC) ரெஸ்பான்சிபிள் ஜுவல்லரி ஹவுஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியநகைத் துறையில் மிகவும் மதிக்கப்படும் ஒன்றான இந்த விருது, மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் அதன் அறநெறிப்படியான ஆதாரம் மற்றும் நிலைத்தன்மைக்கான உறுதியான உறுதிப்பாட்டை
அங்கீகரிக்கிறது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்க்கு விருது:

பொறுப்புணர்வுடன் வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் மற்றும் வைரங்களை சட்டப்பூர்வமான மூலங்களிலிருந்து மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் வாங்குவதில் அர்ப்பணிப்புடன் இருப்பதை இந்த விருது அங்கீகரிக்கிறது. மேலும் ஒவ்வொரு நகையும் மிக உயர்ந்த தூய்மையுடனும், நேர்மையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்கிறது.

பெங்களூருவில் உள்ள ஹில்டன் மான்யதா பிசினஸ் பார்க்கில் நடைபெற்ற விழாவில், இந்திய தங்கக் கொள்கை மையத்தலைவர் டாக்டர் சுந்தரவல்லி நாராயணசாமியிடமிருந்து மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்
சார்பாக இந்திய ஆப்பரேஷன்ஸின் நிர்வாக இயக்குநர் ஆஷர் ஓ பெற்றார். இந்நிகழ்ச்சியின்போது மலபார் கோல்டு LLC பிசினஸ் டெவலப்மென்ட் தலைவர் சீதாராமன் வரதராஜன், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புல்லியன் தலைவர் திலீப் நாராயணன், ஃபின்மெட் PTE லிமிடெட் இயக்குநர் சுனில் காஷ்யப், ராண்ட் ரிஃபைனரி CEO பிரவீன் பைஜ்நாத், மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கர்நாடகா மண்டலத் தலைவர் ஃபில்சர் பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொறுப்பான நகை மாளிகை விருது:

நிகழ்ச்சியில் பேசிய மலபார் குழுமத் தலைவரான M.P.அஹம்மது, தனது நன்றியைத் தெரிவித்ததோடு, அறநெறிப்படியான நடைமுறைகளுக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். அவர் பேசும்போது, & IGC-யின் பொறுப்பான நகை மாளிகை விருதைப் பெறுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

திருமணம் மற்றும் பிறந்த நாள் போன்ற வாழ்வின் மிக மகிழ்ச்சியான தருணங்களின்போது பரிமாறிக்கொள்ளப்படும் பொக்கிஷமான பரிசுகள்தான் தங்கமும், வைரமும். எந்த வித சுரண்டலும் இல்லாமல் சட்டப்பூர்வ ஆதாரங்களிலிருந்து அறநெறிப்படி இந்த அரிதான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதில்
நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அப்போதுதான் இந்த அன்பளிப்புகள் அவை அடையாளப்படுத்தும் புனிதம், தூய்மை மற்றும் புத்திசாலித்தனத்தை உண்மையிலேயே பிரதிபலிப்பவையாக இருக்கும். தங்கம் வெட்டியெடுக்கப்பட்ட தருணத்திலிருந்து எங்கள் வாடிக்கையாளர்களை சென்றடையும் வரை இந்த உறுதிப்பாட்டை நாங்கள் நிலைநிறுத்துகிறோம் என்றார்.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் இன்டியா ஆப்பரேஷன்ஸின் நிர்வாக இயக்குநரான ஆஷர் தங்கள் கடைகள் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சட்ட மற்றும் வரி ஒழுங்குமுறைகளுக்கு நிறுவனம் இணங்கி நடப்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். நாங்கள் வாங்கும் மற்றும் விற்கும் தங்கக் கட்டிகள் பொறுப்பானதாகவும், முழுமையாக சட்டப்பூர்வமாகவும் இருப்பதை உறுதிசெய்கிறோம்.

உலகின் நம்பகமான பிராண்ட்:

லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் (LBMA) தர சான்றளிக்கப்பட்ட லண்டன் குட் டெலிவரி பார்கள் (LGDB), துபாய் குட் டெலிவரி பார்கள் (DGDB) மற்றும் HUID ஹால்மார்க் செய்யப்பட்ட இந்திய குட் டெலிவரி பார்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஏற்கனவே உலகின் நம்பகமான
நகை பிராண்டாக மாறியுள்ளது என்று ஆஷர் கூறினார்.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 13 நாடுகளில் 355-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வருகிறது. இவற்றில் 26 நாடுகளைச் சேர்ந்த 21,000-க்கும் மேற்பட்டவர்கள் ஊழியர்களாக இருக்கிறார்கள். 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 15 மில்லியனுக்கும் மேற்பட்ட திருப்தியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள எமது நிறுவனம் தன்னுடைய அனைத்துக் கடைகளிலும் உலகத் தரத்திலான வசதிகளை வழங்குகிறது.

சமூகநீதிக்காக செலவு:

தன்னுடைய ஒன் இந்தியா ஒன் கோல்டு ரேட் என்ற முன்முயற்சி வழியாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் தங்கத்திற்கான ஒரே மாதிரியான விலையினை மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்
உறுதிசெய்கிறது. கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டிக்கான (CSR) தன்னுடைய குறிப்பிடத்தக்க
பங்களிப்புக்காகவும் மலபார் குரூப் பெயர் பெற்றுள்ளது.

தொடங்கப்பட்டதிலிருந்து, குழுமம் அதன் லாபத்தில் 5% பல்வேறு CSR முயற்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இத்தகைய குறிப்பிடத்தக்க திட்டங்களில் தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்கும் ‘பசியில்லா உலகம்’ மற்றும் ஆதரவற்ற
பெண்களுக்கு தங்குமிடம் மற்றும் பராமரிப்பு வழங்கும் ‘கிராண்ட்மா ஹோம்’ திட்டம் ஆகியவை அடங்கும். மேலும், பின்தங்கியவர்களுக்கு மருத்துவ உதவி, வீடு கட்டுவதற்கான உதவி, பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளம் பெண்களின் திருமணங்களுக்கு நிதி உதவி போன்றவற்றுக்கும் குழு நிதி ஆதரவளிக்கிறது. இன்றுவரை, 250 கோடி இந்திய ரூபாய்கள் இத்தகைய சமூகநீதி
முயற்சிகளுக்காக செலவிடப்பட்டுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
Embed widget