Cylinder Rate : மாதத்தின் முதல் நாளில் குறைந்தது சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?
ஒவ்வொரு மாதமும் இருமுறை சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் இருமுறை சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டர் ரூ.187 குறைந்து ரூ.2,186க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் 14.2 கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. அதேபோல் கொரோனா ஊரடங்கில் இருந்தே பலருக்கும் மத்திய அரசின் சிலிண்டர் மானியம் கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் சிலிண்டருக்கு முழு விலையையும் சாமானிய மக்கள் கொடுக்க வேண்டியிருந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
#Bigbreaking
— Shubhi Maheshwari (@ShubhiMaheshw19) July 1, 2022
लगभग 200 रूपये सस्ता हुआ 19 kg कमर्शियल सिलेंडर का दाम
New price #Delhi - 2219#Mumbai - 1981#Kolkata - 2140#Chennai - 2186#LPG #lpgcylinder #Cylinderprice #cylinder pic.twitter.com/4SSrhstUmo
இதற்கிடையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் 9 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு தலா ரூபாய் 200 மானியமாக வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்பது சமூக உள்ளடக்கத்திற்கான பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் பிரபலமான முயற்சியாகும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பிபிஎல் குடும்பத்திற்கும் இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மாதத்தின் முதல் நாளில் வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் விரைவில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்