LIVE | Kerala Lottery Result Today (23.12.2025): மார்கழி பனியில் பரிசு மழை கொட்டுமா? கேரள லாட்டரி முடிவுகள் இதோ!
Kerala Lottery Result Today LIVE: இன்று (டிசம்பர் 23, 2025) ஸ்த்ரீ சக்தி லாட்டரி குலுக்கல் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அறிய இங்கே இணைந்திருங்கள்.
LIVE

Background
Kerala Lottery Result Today LIVE Tamil (23.12.2025): கேரள மாநில அரசு இயக்கும் கேரளா லாட்டரி திட்டம் நாடு முழுவதும் லாட்டரிகளுக்கான நம்பிக்கையான மற்றும் சட்டபூர்வமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1967-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த திட்டம், மக்கள் நலத்திற்கும், அரசின் வருமானத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
கேரளா லாட்டரி என்பது கேரள அரசால் நடத்தப்படும் முழுமையாக சட்டபூர்வமான, பாரதிராஜ்ய அரசின் அனுமதி பெற்ற லாட்டரி திட்டமாகும். இது, தினசரி லாட்டரிகள் (Daily Lotteries) வாராந்திர மற்றும் மாதாந்திர சிறப்பு லாட்டரிகள் (Weekly & Bumper Lotteries) பல கோடி ரூபாய் பரிசுத் தொகைகளை வழங்கும் பம்பர் டிரா (Bumper Draws) என்பவற்றைக் கொண்டுள்ளது.
கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய அரசு லாட்டரி அமைப்புகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. லாட்டரி குலுக்கல் நேர்மையாக நடைபெற அரசு அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கின்றனர். தினசரி பல்வேறு பெயர்களில் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.
அந்த வகையில் இன்று (டிசம்பர் 23, 2025) ஸ்த்ரீ சக்தி லாட்டரி குலுக்கல் மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அறிய இங்கே இணைந்திருங்கள்.
Kerala Lottery Result LIVE: பரிசுத் தொகையை வாங்க என்னென்ன ஆவணங்கள் அவசியம்?
வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும்.
2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.
பான் கார்டு ஜெராக்ஸ்
வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணம் தேவை.
Kerala Lottery Result 23.12.2025 Live: டிக்கெட் சேதமடைந்துவிட்டால் என்ன செய்வது?
லாட்டரி டிக்கெட் சேதமடைந்து விட்டால் இழப்பீடு கோர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டிக்கெட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.




















