Kerala Pooja Bumper Lottery: கேரள பூஜா பம்ப்பர் லாட்டரி 2025: ரூ.12 கோடி முதல் பரிசு! சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை- அதிர்ஷ்டம் உங்களை தேடி வருமா?
Kerala Pooja Bumper Lottery 2025: இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.300 ஆகும். இந்த பூஜா பம்ப்பர் லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசு ரூ.12 கோடி அளிக்கப்பட உள்ளது.

Kerala Pooja Bumper Lottery 2025: கேரளா திருவோணம் பம்ப்பர் லாட்டரியைத் தவறவிட்ட பொதுமக்கள், பூஜா பம்ப்பர் லாட்டரியை வாங்கலாம் என்று கேரள மாநில லாட்டரி துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக திருவோணம் பம்ப்பர் லாட்டரி குலுக்கல் செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்து கன மழை, ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 4-ம் தேதி லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக 25 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது.
அதே தினத்தில், பூஜா பம்ப்பர் லாட்டரி டிக்கெட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்போது மளமளவென நடந்து வருகிறது. நவம்பர் 22ஆம் தேதி மதியம் 2 மணிக்கு, இந்த லாட்டரிக்கான குலுக்கல் நடைபெற உள்ளது.
டிக்கெட்டை பெறுவது எப்படி?
கேரள லாட்டரி டிக்கெட்டை ஆன்லைனில் வாங்க முடியாது. ஆஃப்லைனில் கேரள மாநிலத்தில் மட்டுமே வாங்க முடியும்.
டிக்கெட் விலை என்ன?
இந்த டிக்கெட் ஒன்றின் விலை ரூ.300 ஆகும். இந்த பூஜா பம்ப்பர் லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசு ரூ.12 கோடி அளிக்கப்பட உள்ளது.
இரண்டாவது பரிசு: ரூ.1 கோடி பரிசு (5 பேருக்கு)
மூன்றாவது பரிசு: ரூ.5 லட்சம் (10 டிக்கெட்டுகளுக்கு)
ஆறுதல் பரிசு: ரூ.1 லட்சம் (4 டிக்கெட்டுகளுக்கு)
நான்காம் பரிசு: ரூ.3 லட்சம் (5 டிக்கெட்டுகளுக்கு)
ஐந்தாம் பரிசு: ரூ.2 லட்சம் (தலா 5 டிக்கெட்டுகளுக்கு) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6ஆம் பரிசு: ரூ.5 ஆயிரம் (தலா 24 டிக்கெட்டுகளுக்கு)
7ஆம் பரிசு: ரூ.1 ஆயிரம் (தலா 222 டிக்கெட்டுகளுக்கு)
8ஆம் பரிசு: ரூ.500 (தலா 370 டிக்கெட்டுகளுக்கு)
9ஆம் பரிசு: ரூ.300 (தலா 340 டிக்கெட்டுகளுக்கு)
45 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை
இந்த பூஜா பம்பர் லாட்டரிக்காக மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பரிசு வென்றவர்கள் தங்கள் வெற்றி எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் பரிசுகளைப் பெற, அவர்கள் 30 நாட்களுக்குள் வென்ற டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும்.






















