MS Dhoni | காவேரி மருத்துவமனை பிராண்ட் அம்பாசிடரானார் தோனி...!
20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குழு மருத்துவ சேவைகளை வழங்கி வருவதாகவும், அதனுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தோனி கூறினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த காவேரி குரூப் ஆஃப் ஆஸ்பிட்டல்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அதன் பிராண்ட் அம்பாசிடராக நியமிப்பதாக இன்று அறிவித்துள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் வளர்ச்சியை போலாவே, தங்கள் மருத்துவமனையின் வளர்ச்சி இருப்பதாகவும், சிறிய நகரத்திலிருந்து எழுந்து அதிக உயரங்களை அடைந்த தோனியின் பயணம் போலவே காவேரியின் பயணமும் இருப்பதாக காவேரி மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dhoni in Chennai: நெருங்கும் ஐபிஎல்.. சென்னை வந்த தோனி..!
‘நாங்கள் திருச்சியில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன் தொடங்கினோம். தற்போது, 1500 படுக்கைகள் கொண்ட வலுவான குழுவாக தமிழ்நாடு மற்றும் பெங்களூரு முழுவதும் கிளைகளைக் கொண்டு தரமான சுகாதார சேவையை மலிவு விலையில் வழங்கும் நோக்கத்தில் பணியாற்றுகிறோம் "என்று காவேரி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் கூறியுள்ளார்.
பிராண்டுடனான தனது தொடர்பைப் பற்றி பேசிய தோனி, 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குழு மருத்துவ சேவைகளை வழங்கி வருவதாகவும், அதனுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறினார்.
We are excited to welcome MS Dhoni as the brand ambassador for the Kauvery Group of Hospitals.#Kauvery #KauveryCares #KauveryHospital #Healthcare #Dhoni #MSD #Thala #MSDhoni #CSK #CSKThala pic.twitter.com/N4Wd1X5aUf
— Kauvery Hospital (@kauveryhospital) August 18, 2021
காவேரி மருத்துவமனைகள், 'நியூ ஏஜ் ஃபேமிலி ஹாஸ்பிடல்' உடன் மல்டி-ஸ்பெஷாலிட்டி கிளினிக்கல் நிபுணத்துவம் மற்றும் 'ஹெல்த்கேர் ப்ரொவைடர்' துறையில் முன்னோடியாக உள்ளது. இது மலிவான விலையில் சுகாதாரத்தை வழங்குகிறது. தனிப்பட்ட மற்றும் சிறப்பு சுகாதார சேவைகளை அரவணைப்புடன் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி மருத்துவ நிபுணர்களால் நிறுவப்பட்ட சில மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்.
காவேரி மருத்துவமனைகள் தற்போது 1500க்கு மேல் படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக சென்னை, திருச்சி, ஓசூர், சேலம் மற்றும் பெங்களூருவில் உள்ளன. மேலும், புதிய நகரங்களில் கூடுதல் மருத்துவமனைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட மல்டிஸ்பெஷாலிட்டி மூன்றாம் நிலை பராமரிப்பு நிபுணத்துவத்தை தவிர, காவேரி மருத்துவமனைகள் மூன்று 'தென்னிந்தியாவில் இருதய மையங்களின் சிறப்பான மையங்களில்' ஒன்றாகும். இன்றைய காலகட்டத்தில் சுகாதாரத் தொழில் மேலும் மேலும் வணிகமயமாக்கப்பட்டு வரும் நிலையில், காவேரி மருத்துவமனைகள் மருத்துவ நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பம், ஒரு நபரின் சுகாதாரத் தேவைகளின் ஒவ்வொரு கட்டத்திலும் கவனிப்புடன் உண்மையிலேயே மலிவு விலையில் வழங்குவதாக உறுதியளிக்கின்றன.