January 2026 Bank Holidays: ஜனவரியில் மட்டும் 11 நாட்கள் வங்கி விடுமுறை.. நோட் பண்ணுங்க!
January 2026 Bank Holidays Tamil Nadu: 4 ஞாயிற்றுக்கிழமைகள் சேர்த்தால் மொத்தம் ஜனவரியில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை விடப்படும் சூழல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் உள்ளூர் நிகழ்வுகளை பொறுத்தும் வங்கி நேரம் மாறும்.

2026ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில் ஜனவரி மாதம் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை என்பது தொடர்பான தகவல்களைக் காணலாம்.
ஜனவரி விடுமுறை நாட்கள்
அதன்படி, 2026 ஜனவரி 1 ஆம் தேதி வியாழக்கிழமை ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 10 ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை, ஜனவரி 15 ஆம் தேதி வியாழக்கிழமை பொங்கல், ஜனவரி 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி உழவர் திருநாள், ஜனவரி 24 ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை, ஜனவரி 26 திங்கட்கிழமை குடியரசு தினம் என 7 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.
இதில் ஜனவரி 14ம் தேதி முதல் தொடர்ச்சியாக விடுமுறை விடப்படுகிறது. மேலும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் சேர்த்தால் மொத்தம் ஜனவரி மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை விடப்படும் சூழல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு பகுதி வாரியாக நடைபெறும் திருவிழாக்கள், உள்ளூர் நிகழ்வுகளைப் பொறுத்து வங்கி செயல்படும் நேரமும் மாறும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டு முன்கூட்டியே முடித்துக் கொள்ள வேண்டும்.
இந்த விடுமுறை நாட்களில் வங்கி சேவைகள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். பல ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படுமா என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் விடுமுறை நாட்களிலும் உள்ள யுபிஐ, மொபைல் பேங்கிங், இணைய வழி வங்கி மற்றும் ஏடிஎம் சேவைகள் அனைத்து வழக்கம்போல தொடரும். பணப்பரிமாற்றம் தொடங்கி பில் கட்டணம் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் நாம் பெறலாம். ஆனால் காசோலை, டிடி, கேஒய்சி அப்டேட் போன்ற ஆவணப்பணிகளை நாம் நேரில் தான் மேற்கொள்ள முடியும்.
இந்தியாவில் வங்கி சேவை
இந்தியாவைப் பொறுத்தவரை அரசுடமையாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் செயல்படுகின்றன. அதைத் தவிர வங்கியுடன் இணைக்கப்பட்ட நிதி நிறுவனங்களும் செயல்பாட்டில் உள்ளது. இத்தகைய வங்கிகளில் ஏராளமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. பணம் சேமிப்பு தொடங்கி கடன் பெறுவது வரை பலவிதமான சேவைகள் வாடிக்கையாளர்களின் தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டு திட்டங்கள், ஆயுள் காப்பிடு, நகை பெட்டகம் என பல வசதிகள் உள்ளது.
வங்கிகளைப் பொறுத்தவரை வணிக வங்கிகளாக பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. அதேபோல் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளும் செயல்படுகின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கியால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதனைத் தவிர வெளிநாட்டை தலைமையமாக கொண்ட வங்கிகள், பிற மாநில மக்களின் நலனுக்காக செயல்படும் வங்கிகள் என அனைத்தும் இந்தியாவில் செயல்படுகின்றன. மேலும் கிராமப்புற வளர்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கத்திலும் வங்கி சேவைகள் செயல்படுகின்றன.





















