Meson Valves IPO Listing : அடிச்சது ஜாக்பாட்.. மேசான் வால்வு நிறுவனத்தின் பங்குகளை போட்டி போட்டு வாங்கிய முதலீட்டாளர்கள்
பெரும் போட்டிக்கிடையே மேசான் வால்வு நிறுவனத்தின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் குவிந்த காரணத்தால் 90 சதவிகித பிரீமியத்துடன் (பங்கு மதிப்பு) ஒவ்வொறு பங்கும் 193.80 ரூபாய்க்கு வர்த்தகமானது.
பைப் வால்வுகளை (Valves) தயாரித்து வரும் முன்னணி நிறுவனமாக இருப்பது மேசான் வால்வு இந்தியா லிமிடெட். இதன் பங்குகள் முதல்முறையாக இந்திய பங்கு சந்தையில் இன்று விற்கப்பட்டது. அடிப்படை விலையாக, மேசான் வால்வு நிறுவனத்தின் பங்கு ஒன்று 102 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
பங்குகளை போட்டி போட்டு வாங்கிய முதலீட்டாளர்கள்:
ஆனால், பெரும் போட்டிக்கிடையே அதன் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் குவிந்த காரணத்தால் 90 சதவிகித பிரீமியத்துடன் (பங்கு மதிப்பு) ஒவ்வொறு பங்கும் 193.80 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 12 வரையிலான 5 நாள்களில், மேசான் வால்வு நிறுவனத்தின் பங்குகள் 173.65 மடங்கு அதிகம் வாங்கப்பட்டுள்ளது.
சில்லறை வர்த்தக பிரிவில் அடிப்படை விலையில் இருந்து அதன் பங்குகள் 203.02 மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டது. அதே சமயத்தில், இதர பிரிவில் 132.74 மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம்:
வர்த்தக நேர தொடக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 516.94 அல்லது 0.78% புள்ளிகள் சரிந்து 66,285.32 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 118.75 அல்லது 0.73 % புள்ளிகள் சரிந்து 19,756.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ, ஜியோ ஃபினான்சியல், அதானி எண்டர்பிரைசர்ஸ், டாக்டர். ரெட்டி லேப்ஸ், எஸ்.பி.ஐ., கோல் இந்தியா, டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஜெ.எஸ்.டபுள்யூ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
ஐ.சி.ஐ.சி. வங்கி, க்ரேசியம், டி.சி.எஸ்., சிப்ளா, லார்சன், பஜாஜ் ஃபின்சர்வ், ஐ.டி.சி., எஸ்.பிலை. லைஃப் இன்சுரா, விப்ரா, அல்ட்ராடெக் சிமெண்ட், இன்ஃபோசிஸ், ஹீரோ மோட்டார்கார்ப், நெஸ்லே, இந்தஸ்லேண்ட் வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி, டிவிஸ் லேப்ஸ், சன் பார்மா, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், பிரிட்டானியா, கோடாக் மஹிந்திரா, டைட்டன் கம்பெனி, பவர்கிட் கார்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்த இந்திய கனட பிரச்னை:
கனடா - இந்தியா இடையில் நீடிக்கும் பதற்றம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தை வணிகத்தில் பிரதிபலித்தது. நிஃப்டி 19,900 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சியடைந்தது. பங்குச்சந்தை நேற்று வர்த்த நேர முடிவில் 796 புள்ளிகள் சரிந்தது. தொடர்ந்தும் இன்றும் வீழ்ச்சியந்துள்ளது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அமெரிக்கவில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவித்தத்தில் அமெரிக்க பங்குச்சந்தையும் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் ஆசிய பங்குச்சந்தையின் போக்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கச்சா எண்ணெய் விலை 1% சரிந்தது. தங்கத்தின் விலை சற்று உயர்ந்ததது. இன்று முழுவதும் இந்திய பங்குச்சந்தை சரிவுடனேயே வர்த்தகமாக வாய்புள்ளதாக கூறப்படுகிறது. 1,499 பங்குகளின் மதிப்பு உயர்வுடனும் 1,233 பங்குகள் சரிவுடனும் `128 பங்குகளின் மதிப்பு மாற்றமின்றியும் தொடர்ந்தன.