Gold Silver: அச்சச்சோ! தங்கம், வெள்ளி விலை உயர்கிறதா? மத்திய அரசு அதிரடி முடிவு - அதிர்ச்சியில் மக்கள்!
தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
Gold Silver: தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 2 மாதங்களாக தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் 2024 பல்வேறு சாத்தியமான சீர்திருத்தங்கள், குறிப்பாக வருமான வரித்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடாந்திர பட்ஜெட்டானது அரசாங்கத்தின் எதிர்வரும் நிதியாண்டிற்கான நிதித் திட்டங்களைக் வெளிக்காட்டும் ஒரு முக்கியமான கொள்கை ஆவணமாகும். வரி செலுத்துவோர் மற்றும் வணிகர்களுக்கு, வருமான வரி விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது மிக முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு:
இந்த நிலையில், தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 2 மாதங்களாக தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இந்த புதிய வரி மாற்றம் ஜனவரி 22ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.
இதனால், இன்று காலை முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் புதிய வரை பொருந்தும். இதில் அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் அளவில் இருக்கும். 5 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கம் மற்றும் வெள்ளியை சுத்திகரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 14.35 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் 10 சதவீதம் அடிப்படை சுங்க வரி மற்றும் 4.35 சதவீதம் விவசாய உள்கடைப்பு மேம்பாட்டு செஸ் அடக்கும். இவற்றுக்கு கூடுதல் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,830 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.76.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.76,500 க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க