GST collections: ஜூலை மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.48 லட்சம் கோடி.. மத்திய நிதியமைச்சகம் தகவல்!
ஜூலை மாதத்தில் மொத்தம் ரூ. 1,48,995 கோடி ஜிஎஸ்டி தொகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் ரூ. 1,48,995 கோடி ஜிஎஸ்டி தொகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தாண்டு கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் ரூ. 1,48,995 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,751 கோடி, எஸ் ஜிஎஸ்டி ரூ. 32,807 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 79,518 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 41,420 கோடி உள்பட). செஸ்வரி ரூ. 10,920 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 995 கோடி உள்பட). ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபின் 2-வது முறையாக அதிக வருவாய் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.6302 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 34 சதவீதம் அதிகரித்து, ரூ.8,449 கோடி வசூலாகியுள்ளது.
புதுச்சேரியில் சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.129 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 54 சதவீதம் அதிகரித்து, ரூ.198 கோடி வசூலாகியுள்ளது.
₹1,48,995 crore gross GST revenue collected in the month of July 2022
— PIB India (@PIB_India) August 1, 2022
GST Revenue collection for July second highest ever & 28% higher than the revenues in the same month last year
Read details: https://t.co/TdZTWLNVxT pic.twitter.com/bkfMGSwqao
ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ. 32,365 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ. 26,774 கோடியும் அரசு வழங்கியுள்ளது. 2022 ஜூலை மாதத்தில் மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கான மொத்த வருவாய் வழக்கமான பைசலுக்கு பின் சிஜிஎஸ்டிக்கு ரூ.58,116 கோடியாகவும் எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ. 59,581 கோடியாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,16,393 கோடியாக இருந்த நிலையில் 2022 ஜூலை மாத வருவாய் அதைவிட 28 சதவீதம் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை விட சென்ற மாதம் சரக்குகளின் இறக்குமதி மூலமான வருவாய் 48 சதவீதமும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான வருவாய் (சேவைகளின் இறக்குமதி உள்பட) 22 சதவீதமும் அதிகமாக உள்ளது.
கடந்த 5 மாதங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பது ஒவ்வொரு மாதமும் சீரான அதிகரிப்பை காட்டுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு, இதே மாதத்தில், ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 1,16,393 கோடியாக இருந்த நிலையில், இந்தாண்டு 28 சதவீதம் அதிகரித்துள்ளது, போலவே, கடந்தாண்டு ஜூலை மாதத்தைவிட சென்ற மாதம் சரக்கு இறக்குமதி மூலமான வருவாய் 48 சதவீதமும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான வருவாய் (சேவைகளின் இறக்குமதி உள்பட) 22 சதவீதமும் அதிகமாக கிடைத்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக பதிவாகியிருப்பது ஒவ்வொரு மாதமும் சீரான அதிகரிப்பை காட்டுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்