Blinkit : பத்து நிமிட டெலிவரி: Blinkit என பெயர் மாற்றிய Grofers.. ஒரு பார்வை..
இனி பத்தே நிமிடங்களில் உங்கள் வீடுகளுக்கு ப்ளிங்கிட் வழியாக பொருட்கள் டெலிவரி செய்யப்படும்
சோமாட்டோவின் ஆன்லைன் மளிகை விநியோக நிறுவனமான ஃக்ரோபர்ஸ் தனது நிறுவனத்துக்கு மறுபெயரிட்டுள்ளது. விரைவான வர்த்தகம் அல்லது அதிகபட்சமாக 10 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு போய் சேர்ப்பதைக் குறிக்கும் வகையில் Blinkit என தனது நிறுவனத்துக்கு பெயரிட்டுள்ளது. 10 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் மளிகைப் பொருட்களை வழங்குவதற்கான முயற்சியைத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு தற்போது தனது பெயரை அந்த நிறுவனம் மாற்றியுள்ளது. "நாங்கள் க்ரோஃபர்களாக நிறைய கற்றுக்கொண்டோம், எங்கள் கற்றல், எங்கள் குழு மற்றும் எங்கள் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் புதிய தயாரிப்பு அல்லது அதிவேக வர்த்தகம் என ஏதாவது ஒன்றை முன்னெடுப்பதற்காக மீண்டும் ஆயத்தமாகி உள்ளோம். இன்று, நாங்கள் ஒரு புதிய நிறுவனமாக முன்னேறி வருகிறோம்.
அதனடிப்படையில் நாங்கள் எங்கள் பணியை இனி Grofers ஆக செய்ய மாட்டோம் - அதை Blinkit ஆகச் செய்வோம்," என்று Grofersன் இணை நிறுவனர் மற்றும் தலைவர் அல்பிந்தர் திந்த்ஸா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். க்ரோஃபர்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் ஒரு பில்லியன் டாலர் மதிப்பீட்டுடன் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்தது. உணவு சேகரிப்பு நிறுவனமான Zomato நிறுவனத்திடமிருந்து 120 மில்லியன் டாலருக்கும் மேலாகத் திரட்டிய பிறகு. "எங்களுக்கு நிறுவனர்களைப் போல சிந்திக்கக்கூடிய நபர்கள் தேவை பணியாளர்களைப் போல அல்ல, நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால், உங்களை நம்பி, 10 நிமிடங்களில் உலகை மாற்ற உங்களுக்கு அதிகாரம் அளிக்கும் நிறுவனத்தில் சேர விரும்புகிறீர்கள்," என்று திண்ட்சா மேலும் கூறினார். Grofers தனது வணிகத்தின் கவனம் எவ்வாறு மாறுகிறது என்பதைக் காட்ட Blinkit என்ற புதிய பெயரை சேர்த்துள்ளது. பல இந்திய மாநிலங்கள் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதால், கடந்த ஆண்டில் க்ரோஃபர்ஸ் அதிவேகமாக மக்களிடையே பரவலானது.
View this post on Instagram