Interest Rate Hike: ஜன.1 முதல் அஞ்சல் சேமிப்பு, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு வட்டி உயர்வு..! எவ்வளவு தெரியுமா..?
ஜனவரி 1ம் தேதி முதல் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அஞ்சல் சேமிப்பு ( கால வைப்பு ) , என்.எஸ்.சி மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஜனவரி 1 முதல் உயர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1.1 சதவீதம் வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய வட்டி விகிதம்:
கடந்த சில ஆண்டுகளாகவே உயர்த்தப்படாமல் இருந்த அஞ்சலக சேமிப்பு திட்டமானது ஜனவரி முதல் மார்ச் காலாண்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதிய வட்டி விகித உயர்வு அறிவிப்பின்படி, 1 முதல் 5 வருடங்களுக்கான அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதமானது 1.1 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் தற்போதுள்ள வட்டி விகிதம் 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி) திட்டத்துக்கான வட்டி விகிதமானது 6.8 சதவிகிதம் வட்டி விகிதத்தில் இருந்து 7 சதவீத வட்டி விகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பி.பி.எஃப். மற்றும் ( சுகன்யா சம்ரிதி திட்டம் ) செல்வமகள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் உயர்வு ஏதும் அறிவிக்கப்படவில்லை.
Govt of India increases interest rates on small saving schemes upto 1.1% for the January to March 2023 quarter pic.twitter.com/1UYg92WZjt
— ANI (@ANI) December 30, 2022
செல்வ மகள் சேமிப்பு திட்டம்:
இத்திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் (அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 2 பெண் குழந்தைகள்) இத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்றிடலாம். முதிர்வுத் தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது நிறைவு பெற்றவுடன் பெற்றுக் கொள்ளலாம். இத் திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு.