மேலும் அறிய

Gautham Adani: ’என் வளர்ச்சியை பிரதமர் மோடியுடன் இணைத்துச்சொல்ல முடியாது..’ குற்றச்சாட்டுகளை மறுத்த கௌதம் அதானி..

தனது வணிக சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது கௌதம் அதானி தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நெருங்கிய உறவின் காரணமாக தற்போதைய பாஜக அரசாங்கத்திடம் இருந்து ஆதரவைப் பெறுவதற்கான "ஆதாரமற்ற" குற்றச்சாட்டுகளை மறுத்த கெளதம் அதானி, தனது வணிக சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது உறவுகளால் ஆதாயம் அடைந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அதானி குழுமத்தின் பயணம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸின் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தொடங்கியது என்று கூறினார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "பிரதமர் மோடியும் நானும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு என்னை எளிதாக இலக்காக்க முடிகிறது. இதுபோன்ற கதைகள் எனக்கு எதிராகத் தள்ளப்படுவது துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் கூறினார் .

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி "சாமானியர்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து" தனது "முதலாளித்துவ நண்பர்களுக்கு" கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

தொழிலதிபர் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் கௌதம் அதானி தனது தொழில் வாழ்க்கை அதன் "முதல் பெரிய உந்துதல்" ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தொடங்கியது என குறிப்பிட்டார்.

நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகிய இருவர் பெரும் பொருளாதார சீர்திருத்தங்களை 1991-ல் தொடங்கியபோது நானும் அந்த சீர்திருத்தங்களின் பயனாளியாக இருந்திருக்கிறேன் என கூறினார். மேலும் இது அவரது தொழில் வாழ்க்கைக்கு கிடைத்த இரண்டாவது உந்துதலாகும். 

1995 ஆம் ஆண்டு பா.ஜ.க கேசுபாய் படேல் குஜராத்தின் முதலமைச்சராக பதவியேற்றதும், கடலோர மேம்பாட்டில் கவனம் செலுத்தியபோது, முந்த்ராவில் தனது முதல் துறைமுகத்தை உருவாக்க அவருக்கு வாய்ப்பளித்தது என்றும், ​​தனது தொழில் வாழ்க்கையின் "மூன்றாவது திருப்புமுனை" எனவும் குறிப்பிட்டார்.

நான்காவது திருப்புமுனையாக 2001ல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கீழ் வளர்ச்சியில் பாரிய கவனம் செலுத்திய போது கிடைத்தது. அவரது கொள்கைகள் மற்றும் அவற்றை செயல்படுத்துவது மாநிலத்தின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றியது மட்டுமல்லாமல், தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்துவதற்கு அனுமதித்தது,” என்று அதானி கூறினார்.    

முதல் தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் ஒரு சாதாரண தொடக்கத்தைக்கொண்ட நான் திருபாய் அம்பானியால் மிகவும் ஈர்க்கப்பட்டேன்," என்று அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Embed widget