(Source: ECI/ABP News/ABP Majha)
Gold-Silver Rate Today 23 Dec: சென்னையில் சவரன் தங்கம் விலை என்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!
Gold-Silver Rate Today 23 Dec : சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 256 அதிகரித்து ரூபாய் 36 ஆயிரத்து 448க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் நேற்று கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 528க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து 224க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 32 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 556க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 256 அதிகரித்து ரூபாய் 36 ஆயிரத்து 448க்கு விற்கப்படுகிறது. சென்னையில் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 922க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 39 ஆயிரத்து 376க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் அதிகரித்து ரூபாய் 66.20க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 66 ஆயிரத்து 200க்கு விற்கப்படுகிறது.
முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்