Watch Video: பாலியல் சீண்டலை எதிர்த்த மாணவி.. துடிதுடிக்க கத்தியால் குத்திய கொடூரன்..பதைக்கவைக்கும் வீடியோ
சிறுமி ஒருவரை ஒரு நபர் கத்தியால் குத்திய வீடியோ மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் மற்றும் வன்முறைகள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த முறை சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக தொடர்ந்து வந்த நபர், பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவை ஒரு அமைப்பு ஒன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி இந்தச் சம்பவம் பீஹார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் பகுதியில் நடைபெற்றுள்ளது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் தன்னுடைய பள்ளியில் இருந்து நடந்து வருகிறார். அப்போது அவரை ஒரு நபர் அருகே வந்து பாலியல் சீண்டல் செய்ய முயல்கிறார். அதை அச்சிறுமி தடுக்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணை அவர் வைத்திருந்த கத்தியை வைத்து குத்தியுள்ளார். அப்பெண் சரமாறிய குத்தியை நபரை பின்னர் அருகே இருந்த பொதுமக்கள் தடுத்து விரட்டிம் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
!!!बेटियां अब सुरक्षित नहीं!!!
— Social Justice Army of India (SJAI) (@SJAofIndia) December 19, 2021
छेड़खानी का विरोध करने पर आठवीं की स्कूली छात्रा को मनचले ने दिन-दहाड़े चाकुओं से छलनी किया, गोपालगंज के प्रतापपुर गांव की घटना सीसीटीवी में कैद हुई#Gopalganj #Bihar pic.twitter.com/iJfPUUmz7s
இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அச்சிறுமியை கொலை செய்ய முயற்சி செய்வதற்கு முந்தைய நாள் அவர் பாலியல் சீண்டல் செய்துள்ளார். அதற்கு அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவரை நன்றாக திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவரை அடுத்த நாள் கொலை செய்ய அந்த நபர் முடிவு செய்து காத்திருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் 15 விநாடிகளுக்குள் அந்த சிறுமியை 8 முறைக்கு மேல் கத்தியால் குத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளி சிறுமி ஒருவர் நடந்து வரும் வழியில் ஒரு நபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: மனைவியும் கேர்ள் ஃப்ரெண்டும்.. பெரும் சர்ச்சையில் சிக்கிய கங்குலி..!