மேலும் அறிய

Gold, Silver Price Today : தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை; இன்றைய நிலவரம் இதுதாங்க!

Gold Rate Today 09 December : சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து கீழே காணலாம்.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து  ரூ. 40,376 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.24 உயர்ந்து  ரூ.5,047 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,592 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,449  ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் வெள்ளி விலை 1.20 காசுகள் உயர்ந்து ரூ.72.50 ஆக விற்பனையாகிறது.  பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.72,500ஆக விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,184 ஆகவும்  தங்கம் கிராமுக்கு  ரூ.5,023 ஆகவும் விற்பனையானது.

தங்க ஆபரணங்கள்:

இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.

சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.

அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.

தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்க சேமிக்க தொடங்கியாச்சா? உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.

தங்க சேமிப்பு திட்டங்கள் : 

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் தங்கத்தை வாங்கும் நபர்களால் தங்க சேமிப்பு திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நகைக்கடைக்காரர்கள் பொதுவாக இதுபோன்ற திட்டத்தில் கடைசி தவணை செலுத்துவார்கள்.

டிஜிட்டல் தங்கம்

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வடிவங்களில் வாங்கலாம். 

  • தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFகள்) : ப.ப.வ.நிதி என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை உள்ளடக்கியது. அதன் மதிப்பு தூய தங்கத்தால் கணிக்கப்படுகிறது. அதன் மதிப்பு தற்போதைய தங்கத்தின் விலை மற்றும் தங்கத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. 
  • தங்கக் குவிப்புத் திட்டம் : Paytm மற்றும் Phonepe போன்ற மொபைல் வாலட்டுகள், வாடிக்கையாளர்களை மாதாந்திர முதலீட்டில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கத்தை சேமிக்கவும் அனுமதிக்கின்றன
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிSubramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget