Gold, Silver Price: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது: இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
Gold, Silver Price Today 15 February: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gold, Silver Price Today: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்துள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ 42,640 ஆக விற்பனையானது. இதனைத் தொடர்ந்து இன்றும் ரூ.120 குறைந்து ரூ 42,520 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,315 ஆக விற்பனையாகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 46,384 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,798 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.72 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 72,500-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு சவரன் விலை ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் தற்போது மீண்டும் குறைந்து வருவது சற்று நிம்மதியளித்துள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறந்த சேமிப்பு “தங்கம்”
இந்தியாவை பொறுத்தவரை தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சேமிப்பு திட்டங்களில் தங்கம் என்றைக்குமே ஒரு சிறந்த சேமிப்பாகவே பார்க்கப்படுகிறது திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.
தங்க சேமிப்பு திட்டங்கள் :
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் தங்கத்தை வாங்கும் நபர்களால் தங்க சேமிப்பு திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நகைக்கடைக்காரர்கள் பொதுவாக இதுபோன்ற திட்டத்தில் கடைசி தவணை செலுத்துவார்கள்.
டிஜிட்டல் தங்கம்
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வடிவங்களில் வாங்கலாம்.
தங்கப் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFகள்) : ப.ப.வ.நிதி என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை உள்ளடக்கியது. அதன் மதிப்பு தூய தங்கத்தால் கணிக்கப்படுகிறது. அதன் மதிப்பு தற்போதைய தங்கத்தின் விலை மற்றும் தங்கத்தின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
தங்கக் குவிப்புத் திட்டம் : Paytm மற்றும் Phonepe போன்ற மொபைல் வாலட்டுகள், வாடிக்கையாளர்களை மாதாந்திர முதலீட்டில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கத்தை சேமிக்கவும் அனுமதிக்கின்றன.