மேலும் அறிய

GOLD RATE TODAY: குஷியோ குஷி.! தங்கத்தின் விலை அதிரடியாக 22,800 ரூபாய் குறைந்தது- 3 நாளில் தலைகீழ் மாற்றம்

GOLD RATE TODAY: தங்கத்தின் விலை கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் எதிர்பாரா திருப்பமாக சவரனுக்கு 15,200 ரூபாய் சரிந்தது. இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது. அந்த வகையில் ஒரு சவரனுக்கு 7600 ரூபாய் குறைந்துள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலையில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. இதன் படி டாலர் மீது நம்பிக்கையை இழந்த பல்வேறு நாடுகள் தங்கத்தை அதிகளவு வாங்கி வருகிறது. இதன் காரணமாக தங்கத்திற்கான விலையானது பல மடங்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து 1.20 லட்சம் ரூபாயாக உள்ளது. இது வரும் நாட்களில் புதிய உச்சத்தை தொடும்  என கணிக்கப்பட்டுள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் தங்கத்திற்கு இணையாக அதிகரித்து வருகிறது.

ஒரே நாளில் வரலாறு படைத்த தங்கம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சத்தால் நடுத்தர வர்க்க மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். தங்கள் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்விற்கு தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரே நாளில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது.  ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,34,400 ரூபாய் என விற்பனையானது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில்,

அடுத்த நாள் ஜனவரி 30-ம் தேதியன்று அதிரடியாக தங்கத்தின் விலை குறைந்தது. ஒரு கிராம் 950 ரூபாய்  குறைந்து 15,850 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,26,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் மாதத்தின் கடைசி நாளான ஜனவரி 31ஆம் தேதியும் தங்கத்தின் விலை குறைந்தது. 

 ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை

கிராமிற்கு 950 ரூபாய் குறைந்து  14,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அந்த வகையில் 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 15,200 ரூபாய் அளவிற்கு குறைந்தது. இதனையடுத்து நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்குமா.? என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதே நேரம் பங்கு சந்தையில் வீழ்ச்சியை சந்தித்தது.

இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 950 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 7,600 ரூபாய்க்கு குறைந்து ஒரு சவரன் 1 லட்சத்து 11ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் அதிரடியாக 22,800 ரூபாய் குறைந்துள்ளது.

இதேபோல வெள்ளியின் விலையும் சரசரவென குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 300 ரூபாய்க்கும், ஒரு கிலோவிற்கு 20ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ வெள்ளி 3லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
Embed widget