Gold Silver Price Today: இன்று தங்கம் வாங்கினால் செம லாபம்தான்! விலை குறைவு! இன்றைய நிலவரம் இதுதான்!
Gold Silver Price Today: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய விவரம்.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதுதான்:
சென்னையில் இன்று (செப்.10) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து 4740 ரூபாயாக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.37,920ஆக விற்பனையாகிறது.
அதேபோல் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41,136 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,142 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து கிராம் ரூ. 60.40ஆகவும் கிலோ 60,400ஆகவும் விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,880 ஆகவும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு 4,735 ஆகவும் விற்பனையானது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41,096 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,137 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
தங்க ஆபரணங்கள்
இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால் தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.
சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.
அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.
தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்க சேமிக்க தொடங்கியாச்சா?
மேலும் வாசிக்க..
Queen Elizabeth: உலகப்புகழ்.. தன்னடக்கம்..யார் இந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத்..?