Gold Rate 12th May: ஒரே நாளில் 2 முறை, அதிரடியாக விலை குறைந்த தங்கம் - இன்று எவ்வளவு தெரியுமா?
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 2 முறை அதிரடியாக விலை குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, காலை மற்றும் மாலையும் சேர்த்து, சவரனுக்கு 2,360 ரூபாய் மொத்தமாகக் குறைந்துள்ளது. தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன என பார்க்கலாம்.
இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கத்தின் விலை
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தொடங்கிய 7-ம் தேதி, தங்கத்தின் விலை கிராம் 9,075 ரூபாயாகவும், ஒரு சவரன் 72,600 ரூபாயாகவும் இருந்த நிலையில், அதற்கு அடுத்த நாளான 8-ம் தேதி சவரனுக்கு 440 ரூபாய் அதிகரித்தது. அதன்படி, ஒரு கிராம் 9,130 ரூபாயாகவும், ஒரு சவரன் 73,040 ரூபாயாகவும் இருந்தது.
பின்னர், 9-ம் தேதி கிராமிற்கு 115 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 9,015 ரூபாயாகவும், சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 72,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து, 10-ம் தேதி கிராமிற்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,045 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,360 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதைத் தொடர்ந்து, 11-ம் தேதியான நேற்று அதே விலையில் நீடித்த தங்கம், 12-ம் தேதியான இன்று, காலை, மாலை என இரு வேளைகளிலும், 2,360 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
அதன்படி, இன்று காலை கிராமிற்கு 165 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,880 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 71,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலையே, கிராமிற்கு மேலும் 130 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 8,750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு மேலும், 1,040 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 70,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,360 ரூபாய் குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





















