Gold Rate 23rd Oct.: தங்கம் வாங்க ஓடுங்க.! 2-வது நாளாக குறைந்த விலை - இன்று சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்த நிலையில், இன்றும் விலை குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையிலிருந்து விலை குறையத் தொடங்கியுள்ளது. நேற்றும் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்த நிலையில், இன்று காலையிலும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்து வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்க்கலாம்.
2-வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் மாற்றங்களை கண்டு வருகிறது. தினம் தினம் உச்சங்களை தொட்டுவரும் தங்கத்தின் விலை, விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் அதிரடியாக விலை குறைந்து வருகிறது.
கடந்த 21-ம் தேதி காலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக 2 ஆயிரத்து 80 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. அதன்படி, கிராமிற்கு 260 ரூபாய் விலை உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 12,180 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், சவரனுக்கு 2,080 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 97,440 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில், 21-ம் தேதி மாலையே சவரனுக்கு 1,440 ரூபாய் விலை குறைந்தது மக்களுக்கு ஆறுதல் அளித்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 180 ரூபாய் குறைந்து, கிராம் சரியாக 12,000 ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் சரியாக 96,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த சூழலில், 22-ம் தேதியான நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 3,680 ரூபாய் குறைந்து அசத்தியது. அதன்படி, நேற்று காலை கிராமிற்கு 300 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 11,700 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,400 ரூபாய் விலை குறைந்து ஒரு சவரன் 93,600 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், நேற்று மாலையில் மேலும் அதிரடியாக கிராமிற்கு 160 ரூபாய் விலை குறைந்த தங்கம், ஒரு கிராம் 11,540 ருபாய்க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 92,320 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த சூழலில், இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை
இன்று காலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 40 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் சரியாக 92,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் குறைந்தது
இதேபோல், வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 21-ம் தேதி காலையில் 2 ரூபாய் குறைந்த வெள்ளியின் விலை, மாலையில் மேலும் 6 ரூபாய் என மொத்தமாக 8 ரூபாய் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் 182 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த சூழலில், 22-ம் தேதியான நேற்றும் வெள்ளியின் விலை கணிசமாக குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 7 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 175 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயாக விற்கப்பட்டது.
இந்நிலையில், இன்றும் கிராமிற்கு ஒரு ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 174 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து குறைந்து வருவது, பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.





















