Gold Rate 6th October: வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்; கிராம் 11,000-த்தையும் சவரன் ரூ.88,000-த்தை கடந்தது; இன்று எவ்வளவு.?
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரன் 88 ஆயிரம் ரூபாயை கடந்து வரலாறு காணாத உச்சத்திற்கு சென்றுள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இன்று வரலாறு காணாத புதிய உச்சத்திற்க சென்றுள்ளது. ஒரு கிராம் 11 ஆயிரத்தையும், ஒரு சவரன் 88 ஆயிரத்தையும் கடந்ததால் பெதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதேபோல் வெள்ளியின் விலையும் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.
வரலாறு காணாத புதிய உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் வலை
தொடர் உயர்வை சந்தித்து புதிய உச்சங்களை தொட்டுவரும் தங்கத்தின் விலை, கடந்த அக்டோபர் 1-ம் தேதி, கிராம் 10,950 ரூபாயாகவும், சவரன் 87,600 ரூபாயாகவும் இருந்தது. 2-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது.
இந்நிலையில், 3-ம் தேதி விலை சற்று குறைந்து, ஒரு கிராம் 10,900 ரூபாயாகவும், ஒரு சவரன் 87,200 ரூபாயாகவும் விற்பனையானது. 4-ம் தேதி சற்று விலை உயர்ந்து ஒரு கிராம் மீண்டும் 10,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கும் சென்றது.
தொடர்ந்து நேற்று அதே விலையில் நீடித்த தங்கம், இன்று அதிரடியாக விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
சவரன் ரூ.88,000-த்தை கடந்து புதிய உச்சம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து, கிராம் 11 ஆயிரம் ரூபாயையும், சவரன் 88 ஆயிரத்தையும் கடந்து, வரலாறு காணாத புதிய உச்ச விலையை அடைந்துள்ளது.
அதன்படி, ஒரு கிராமிற்கு 110 ரூபாய் விலை உயர்ந்துள்ள தங்கம், கிராம் 11,060 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்து புதிய உச்சம்
தங்கத்துடன் போட்டி போட்டி வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த 1-ம் தேதி கிராம் 161 ரூபாயாக இருந்த வெள்ளி, 2-ம் தேதி கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து 164 ரூபாயை எட்டியது. 3-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் விலை குறைந்து, கிராம் 162 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், 4-ம் தேதி மீண்டும் அதிரடியாக கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 165 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து 5-ம் தேதி அதே விலையில் நீடித்தது.
இந்நிலையில், இன்று வெள்ளி விலை கிராமிற்கு மீண்டும் ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் 166 ரூபாயை எட்டியுள்ளது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தொடர்ந்து போட்டி போட்டு உயர்ந்து வருவது, தங்கம் வாங்குவோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.





















