மேலும் அறிய

Gold Rate 16th Oct.: போச்சு.! சீக்கிரம் ரூ.1 லட்சம் கன்பார்ம்; சவரன் ரூ.95,000-த்தை கடந்த தங்கம் - இன்றைய விலை என்ன.?

ஒரு லட்சம் ரூபாயை நோக்கி நடைபோட்டுவரும் தங்கம், இன்று சவரனுக்கு 95 ஆயிரம் ரூபாயை கடந்து பொதுமக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

தங்கம் விலை விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என்ற கவலை ஏற்பட்டுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று சவரனுக்கு  320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் விலை 95 ஆயிரம் ரூபாயை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ரூ.95,000-த்தை கடந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 10-ம் தேதி சற்று குறைந்த நிலையில், ஒரு கிராம் 11,340 ரூபாயாகவும், ஒரு சவரன் 90,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. 11-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து சவரன் 92,000 ரூபாயை கடந்தது. அன்று கிராம் 11,500 ரூபாயை எட்டிய நிலையில், ஒரு சவரன் சரியாக 92,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 12-ம் தேதி அதே விலையில் நீடித்தது.

அதைத் தொடர்ந்து, 13-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,580 ரூபாய்க்கு சென்றது. ஒரு சவரன் 92,640 ரூபாய் என்ற உச்ச விலையை அடைந்தது. இந்நிலையில், 14-ம் தேதி தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்தது. 

அதன்படி, ஒரு கிராமிற்கு 245 ரூபாய் உயர்ந்து, கிராம் 11,825 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 1,960 ரூபாய் விலை உயர்ந்து, சவரன் 94,600 ரூபாய்க்கும் விற்பனையானது. தொடர்ந்து, 15-ம் தேதியான நேற்றும் தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 11,860 ரூபாய்க்கும், ஒரு சவரன் 94,880 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

இந்த நிலையில், இன்றும் மீண்டும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை, சவரன் 95,000 ரூபாயை கடந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமிற்கு 40 ரூபாய் விலை உயர்ந்து கிராம் 11,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 95,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைவு

இதேபோல், வெள்ளி விலையும் 200 ரூபாயை கடந்து உச்சம் தொட்ட நிலையில், இன்று ஒரு ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 10-ம் தேதி 7 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 184 ரூபாயை எட்டியது. 11-ம் தேதி 6 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 190 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 12-ம் தேதி அதேவிலையில் நீடித்தது.

பின்னர், 13-ம் தேதி மீண்டும் 7 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 197 ரூபாயை அடைந்தது. இந்நிலையில், 15-ம் தேதி அதிரடியாக 9 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 206 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. தொடர்ந்து, 15-ம் தேதியான நேற்றும் ஒரு ரூபாய் விலை உயர்ந்து கிராம் 207 ரூபாய் என்ற வரலாற்கு உச்சத்தை தொட்டது.

இந்நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 206 ரூபாயாக உள்ளது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு லட்சம் ரூபாயை நோக்கி செல்வது, பொதுமக்கள் மற்றும் மண வீட்டாரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget