Gold Rate: ஒளியின் வேகத்தில் தங்கம் விலை - 70 ஆயிரத்தை நெருங்கி மிரட்டல் - ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?
Gold Rate Chennai: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே அடியாக உயர்ந்து, கிட்டத்தட்ட சவரன் 70 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.

Gold Rate Chennai: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே அடியாக உயர்ந்து, கிட்டத்தட்ட சவரன் 70 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.
புதிய உச்சத்தில் தங்கம் விலை:
சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆயிரத்து 480 ரூபாய் உயர்ந்து 69 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 185 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெறும் 40 ரூபாய் உயர்ந்தால், மொத்தமாக ஆபரண தங்கத்தின் விலை 70 ஆயிரத்தை எட்டிவிடும். கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 160 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசையை குழி தோண்டி புதைக்கும் விதமாக இந்த விலை உயர்வு அமைந்துள்ளது. கடந்த 8ம் தேதி 8 ஆயிரத்து 225 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் ஆபரண தங்கம், மூன்றே நாட்களில் 8 ஆயிரத்து 745 ரூபாயை எட்டியுள்ளது.
எகிறிய வெள்ளி விலை:
வெள்ளி விலையும் சென்னையில் இன்று ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று 107 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு ரூபாய் அதிகரித்து 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது.
ட்ரம்பால் வந்த வினை:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி எனக்கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர்த்தக நாடுகளுக்கு பரஸ்பர விதியை அறிவித்தார். இதனால் சர்வதேச பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் உள்ளது. பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் அச்சத்தில் மூழ்கியுள்ள முதலீட்டாளர்கள், பாதுகாப்பான துறையை நோக்கி தங்களது பணத்தை திசை திருப்புகின்றனர். அந்த வகையில் முதலீட்டாளர்களின் முதன்மையான தேர்வாக தங்கமும் உள்ளது. இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் விளைவாகவே இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

