தங்கம் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இந்த தேதியில் இருந்து 6 இலக்க ஹால்மார்க் கட்டாயம்....வெளியான புதிய அப்டேட்...!
ஆறு இலக்க குறியீடு இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைள் மற்றும் தங்க கலைப்பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Gold : ஆறு இலக்க HUID இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைள் மற்றும் தங்க கலைப் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஹால்மார்க் கட்டாயம்
தங்கத்தில் கலப்படம் செய்யாமல் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக ஹால்மார்க் அறிமுகம் செய்யப்பட்டது. ஹால்மார்க் என்பது இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான தரக்குறியீட்டு முறைமை. இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (BIS) தரக்குறியீடு தங்கம்/வெள்ளி ஆகியவற்றின் தூய்மை அளவுக்கு சான்றிதழ் அளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு தங்கப் பொருளின் மீது இருக்கும் BIS தரக்குறியீடு. இந்திய தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் கீழுள்ள இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வரையறுத்த தர அளவீடுகளுக்கு உட்பட்டதற்கான சான்றிதழ்.
அதில், BIS தர நிர்ணய கழகத்தின் சின்னம், தங்கத்தில் தன்மை அல்லது மாற்றம், ஹால்மார்க் செய்யப்படும் மையத்தின் சின்னம், நகைகள் செய்யப்பட்ட வருடம், BIS அங்கீகாரம் வணிகரின் சின்னம் ஆகியவற்றை ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் இந்த முத்திரைகள் கண்டிப்பாக இருக்கும்.
அடுத்த மாதம் முதல் தடை
இந்நிலையில், ஆறு இலக்க குறியீடு இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைள் மற்றும் தங்க கலைப்பொருட்கள் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது, "தரமான தங்க நகைகள் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 1ஆம் முதல் ஆறு இலக்க HUID ஹால்மார்க் எண்ணுடன் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க கலைப்பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 3ஆம் தேதி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்திய தர நிர்யகத்தின் ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு ஜூன் முதல் இந்திய தர நிலைகள் பணியகம் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. பின்பு, படிப்படியாக அனைத்து இடங்களிலும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டத்தில் 256 மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டத்தில் 32 மாவட்டங்களிலும் என மொத்தம் 288 மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது 51 மாவட்டங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2022-23ஆம் ஆண்டில் இன்று வரை 10.56 கோடி தங்க நகைகள் ஹால்மார்க் செய்யப்பட்டதாகவும், BIS பதிவு செய்யப்பட்ட நகைக்கடைகளில் எண்ணிக்கை 1,53,718 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தரமான தங்க நகைகள் விற்பனை செய்யப்படுவதை உறுதிப்படுத்த ஆறு இலக்க குறியீடு இல்லாமல் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைள் மற்றும் தங்க கலைப்பொருட்கள் அடுத்த மாதம் முதல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.