மேலும் அறிய

Garuda Aerospace: அக்ரி ட்ரோன்  மானியத்தைப் பெறும் முதல் இந்திய நிறுவனம்.. கருடா ஏரோஸ்பேஸ் சாதனை

அக்ரி ட்ரோன்  மானியத்தைப் பெறும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் ஷாம்குமார் தெரிவித்துள்ளார். 

அக்ரி ட்ரோன்  மானியத்தைப் பெறும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் ஷாம்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்னி பிஸ்னஸ் சென்டரில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம்,  அக்ரி ட்ரோன் மானியத்தைப் பெறும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் ஷாம்குமார், துணை தலைவர் ராகவேந்திரன் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார. 

அப்போது, முதன்முறையாக மத்திய அரசிடம் அக்ரி ட்ரோன் மானியத்தை பெறும் முதல் நிறுவனமாக கருடா ஏரோஸ்பேஸ் உள்ளது.  இதன் மூலமாக விவசாயிகள் பல வகையில் பயன்பெற முடியும், மேலும் வங்கிகளில் இதற்கான கடன் உதவியை எங்கள் நிறுவனமே விவசாயிகளுக்கு பெற்று தரும் எனவும் ஷாம்குமார் தெரிவித்தார்

அதேசமயம், கருடா ஏரோஸ்பேஸின் இந்த ட்ரான் மூலமாக விவசாயிகளின் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க முடியும்.  விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க தற்போது ஒரு நாள் முழுவதும் எடுத்துக்கொள்கிறார்கள்.  இந்த ட்ரோன்கள் இந்த பணியை வெறும் 8 நிமிடங்களில் முடித்துவிடும்.  ஒரு ட்ரோனின் விலை ஐந்து லட்சமாக இருப்பின் 40 விழுக்காடு மானியத்தொகையான  2 லட்சம் கழிக்கப்பட்டு மீதமுள்ள பணத்தை தவணை முறையில் விவசாயிகள் செலுத்தலாம்.

 மனிதரின் மூலமாக பூச்சி  மருந்து தெளிப்பதால் ஒரு ஆண்டில் ஏற்படும் செலவு சுமார்  20 லட்சம் ரூபாய் மற்றும் விவசாயிகள் பூச்சி மருந்தினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்டவற்றை தவிர்க்கலாம் என்றும் ஷாம்குமார் கூறினார். குறிப்பாக இந்த ட்ரோன் மூலம் ஒரே நாளில் 30 ஏக்கர் நிலத்தில் மருந்து தெளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
தொடர்ந்து பேசிய முதன்மை இயக்குநர் ஷாம்குமார்,  இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும நிறுவனங்கள், பண்ணை அறிவியல் மையம், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் விவசாய ட்ரோன்கள் வாங்குவதற்கு 100% மானியம் பெற அதாவது அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை பெற விவசாயிகளுக்கு உதவியுள்ளது. இந்த நிதியுதவி மூலம் கருடா கிசான் ட்ரோன்களைப் பயன்படுத்தி விவசாயிகளின் வயல்களில் செய்முறை விளக்கங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்தது.  

விவசாய ட்ரோன்களை வாங்குவதற்கும், விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கங்களுக்கான இணைப்புகளுக்கும் 75% மானிய உதவியை உழவர் உற்பத்தியாளர் சங்கங்கள் பெற்றது. இந்த முன்முயற்சி இந்தியாவில் விவசாய ட்ரோன்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. இது சிறு விவசாயிகளுக்கு பயனளிக்கும். இந்த தொழில்நுட்பத்தை பின்பற்றுவதை அரசாங்கம் ஊக்குவித்து, விவசாயிகளின் விளைச்சலை மேம்படுத்தவும், செலவைக் குறைக்கவும் உதவுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget