Centre Government Diwali Gift: மத்திய அரசின் தீபாவளி பரிசு... நாளை முதல் குறைகிறது பெட்ரோல்... டீசல் விலை!
தீபாவளியை முன்னிடு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையில் 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
Petrol, Diesel Price : சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா?
பெட்ரோல், டீசல் மீது மாநிலங்கள் விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியையும் குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் இன்று ரூ.106.66 ஆக விற்கப்படும் நிலையில் 5 ரூபாய் குறைக்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.102.59க்கு விற்கப்படும் நிலையில் 10 ரூபாய் குறைக்கப்படுகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று ரூபாய் 106.66க்கு விற்கப்பட்டது. டீசல் விலையில் லிட்டருக்கு ரூபாய் 102.59க்கு விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
On eve of #Diwali, Government of India announces excise duty reduction on petrol and diesel. Excise duty on Petrol and Diesel to be reduced by Rs 5 and Rs 10 respectively from tomorrow pic.twitter.com/peYP1fA4gO
— ANI (@ANI) November 3, 2021
#BREAKING | பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு உத்தரவு https://t.co/wupaoCQKa2 | #PetrolDieselPrice | #FuelPrice | #Chennai pic.twitter.com/dVJWTMU4rt
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்