Financial Deadlines: செப்டம்பர் மாதம் தொடங்கியாச்சு; இதையெல்லாம் கட்டாயம் பண்ணிடுங்க... டைம் முடியப்போகுது!
செப்டம்பர் மாதத்திற்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது முதல் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்வது போன்ற வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.
![Financial Deadlines: செப்டம்பர் மாதம் தொடங்கியாச்சு; இதையெல்லாம் கட்டாயம் பண்ணிடுங்க... டைம் முடியப்போகுது! From rs 2000 note deposit to free Aadhaar update 7 important financial deadlines in September financial transactions Financial Deadlines: செப்டம்பர் மாதம் தொடங்கியாச்சு; இதையெல்லாம் கட்டாயம் பண்ணிடுங்க... டைம் முடியப்போகுது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/01/af726603b978dedf9aa73d332936286e1693561276262572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Financial Deadlines: செப்டம்பர் மாதத்திற்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது முதல் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்வது போன்ற வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.
பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான கெடு செப்டம்பரில் வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது முதல் ஆதார் அப்டேட் வரை இதில் அடங்கும். இதில் பல கெடுக்கள் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டவை இப்போது இந்த மாதம் இறுதியில் முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள்:
புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டு புழக்கம் நிறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் 2000 ரூபாய் நோட்டை வைத்திருக்கும் நபர்கள், செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னதாக, வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச ஆதார் அப்டேட்:
ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதைச் செய்ய ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியையும் ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஆதார் அட்டை ஆவணங்களின் இலவச அப்டேட் கெடு முடிவடைகிறது. செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்ய வேண்டும். அதன்பிறகு, இலவசமாக ஆதாரை அப்டேட் செய்ய முடியாது.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார்-பான் இணைப்பு:
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் நிரந்தர கணக்கு வைத்திருப்பவர்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கியது. ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும். மேலும், சிறு சேமிப்பு கணக்கு திறந்து 6 மாத காலத்திற்குள் புதிய பயனர்கள் தங்களது ஆதார் குறித்த தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி எஃப்டி:
பாரத் ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத்தொகை திட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
அமிர்த மஹோத்சவ் எஃப்டி:
ஐடிபிஐ வங்கி தனது ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடிபிஐயின் பிக்சட் டெபாசிட் திட்டம் 375 நாட்கள் FD திட்டமாகும். இந்த திட்டத்தின் செல்லுபடி காலத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தில் 7.10 முதல் 7.65 சதவீதம் வட்டி தரப்பட்டது. சாதாரண குடிமக்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் இத்திட்டத்தில் உள்ளது.
ஆக்சிஸ் மேக்னல் கிரெடிட் கார்டு:
நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மேக்னல் கிரெடிட் கார்டு வசதியை இலவசமாக வழங்குகிறது. ஆனால் செப்டம்பர் 1 முதல் மேக்னஸ் கிரெடிட் கார்டில் வருடாந்திர கட்டண தள்ளுபடி வசதி வழங்கப்படாது. அதாவது, வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)