மேலும் அறிய
Advertisement
வெளியே சொல்லாதீர்கள்: குஜராத் ஃபோர்டு ஊழியர்களுக்கு உத்தரவிட்ட நிர்வாகம்..!
குஜராத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுடன் தொழிற்சாலையை விற்க பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்தியாவிற்கு பை பை சொன்ன ஃபோர்டு
ஃபோர்டு தொழிற்சாலைகளில் மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் முடிவை கைவிட்டிருப்பதாக அறிவித்திருக்கும் ஃபோர்டு இந்தியா நிறுவனம், ஊழியர்களுடன் நிவாரணத் தொகை குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அழைப்பு விடுத்துள்ளது. ஃபோர்டு இந்தியா நிறுவனம் இந்த வருடம் ஜூன் இறுதிக்குள் மறைமலைநகர் தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்திருந்தது. மறைமலை நகர் தொழிற்சாலையில் எக்கோ ஸ்போட் கார் உற்பத்திக்கான பணிகள் மட்டும் நடைபெற்றன. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.
வேலையை உறுதிப்படுத்துங்கள்
ஃபோர்டு நிர்வாகம் குறிப்பிட்ட ஜூன் மாதம் நெருங்கி வரும் நிலையில் தொழிலாளர்களுக்கான ஊதியம், ஊக்கத்தொகை, வைப்புத்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் நிரந்தரப் பணியாளர் சங்கத்தினர் பல வருடமாக இந்த துறை சார்ந்து வேலை பார்த்து வருவதால் எங்களுக்கு வைப்புத் தொகையை விட நிரந்தர பணி அவசியம் என்று தெரிவித்தனர்.
மின்சார வாகன உற்பத்தி
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு மின்சார வாகண உற்பத்தியை ஊக்கப்படுத்த PLI (Production Linked Incentive) Scheme வயிலாக சுமார் 20 வாகன தயாரிப்பு நிறுவணங்களை தேர்ந்தெடுத்தது அதில் ஃபோர்டு நிறுவனமும் ஒன்று. இது தொடர்பாக ஃபோர்டு APA ( Asia Pacific & Africa) ஆசிய பசிபிக் மற்றும் ஆப்பிரிக்க செய்திதொடர்பாளர் செய்தியாளர்களிடம், பேசும் போது, இந்தியாவில் நிச்சயம் மீண்டும் ஃபோர்டு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்வோம் என்று அறிவித்தார்.
அது முதல் நாளே தொழிலாலர்கள் நிர்வாகத்திடம் மின்சார வாகன உற்பத்தி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுமாறு சென்னை மறைமலை நகர் தொழிற்சங்கத்தினர் மற்றும் ஊழியர்கள் கேட்டுக்கொண்டு வந்தனர். தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்ந்து உடனடியாக இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கையை விரித்த ஃபோர்டு
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஃபோர்டு இந்தியாவின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் கூறுகையில் "நாங்கள் கவனமாகப் பரிசீலித்ததில், இந்தியத் தொழிற்சாலையிலிருந்து பேட்டரி கார்கள் ஏதும் தயாரிக்கப்போவதில்லை, ஏற்றுமதியும் செய்யப்போவதில்லை என முடிவு செய்திருக்கிறோம். எங்கள் நிறுவனத்தை உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத் திட்டத்தில் சேர்த்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம், ஆதரவுக்கும் நன்றி. எங்கள் நிறுவனத்தின் வர்த்தகத்தை மறுக்கட்டமைக்கும் திட்டத்தில் உற்பத்தி தொழிற்சாலையில் மாற்று வழிகளுக்கான அம்சங்களை தொடர்ந்து ஆய்வு செய்வோம்." எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நிறுவனத்தின் குறிப்பிட்ட சில பங்குகளை விற்பனை செய்து, ஊழியர்களுக்கு செட்டில்மென்ட் செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் ஊழியர்களிடம் செட்டில்மென்ட் குறித்து பேச அந்நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது இதற்கு ஊழியர்கள் மறுத்து வருகிறார்கள். இந்த சூழலில் ஃபோர்டு நிறுவனம் இப்படி ஒர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குஜராத் தொழிற்சாலை
குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை வாங்கவிருக்கும் நிறுவனத்திடம், தொழிலாளர்களோடு சேர்த்து விற்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகவும், அதுவரை இச்செய்தியை வெளியில் தெரிவிக்காமல், அமைதிகாக்க வேண்டுமென தொழிலாளர்களுக்கு, குஜராத் ஆலை நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு செய்திருக்கிறது. இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மறைமலை நகரில் செயல்பட்டு வரும் ஃபோர்டு தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களிடம், இது குறித்து தொடர்பு கொண்டு கேட்டப்பொழுது, இதேபோன்று சென்னை தொழிற்சாலையும் ஊழியர்களுடன் விற்பனை செய்ய வேண்டும் இதுவே எங்களின் பிரதான கோரிக்கை என தெரிவித்தனர். வருங்கால காலங்களில் பேச்சுவார்த்தையின்போது நிர்வாகத்திடம் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கையாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விளையாட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion