மேலும் அறிய

EPF New Rules: PF அக்கவுண்ட் இருக்கா? 31ம் தேதிக்குள்ள இதையெல்லாம் கண்டிப்பா பண்ணிடுங்க!!

அனைத்து ஊழியர்களும், மின்னணு முறையில் நாமினேஷன் தாக்கல் செய்ய வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் தெரிவித்துள்ளது

வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு பலனளிக்கும்,பயனளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ளது. அதில், சிலவற்றை இங்கே காணலாம்.     

இ-நாமினேஷன்: 

வரும் 31ம் தேதிக்குள், அனைத்து ஊழியர்களும் பணத்துக்கான நாமினி விவரங்களை மின்னணு முறையில் நாமினேஷன் தாக்கல் செய்ய வேண்டும் என்று தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் தெரிவித்துள்ளது.  ஊழியர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை கட்டாயம்  நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்கான வசதி உறுப்பினர்களின் இணைய பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இ-நாமினேஷன்  மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்கு பண உதவி தேவைப்படும் போது, அவர்களே எளிதாக இபிஎஃப்ஓ நிறுவனத்தின் சேவையை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

EPFO website>> Services>> For Employees>> Click “Member UAN/Online Services என்ற வசதி  இ-நாமினேஷன் செய்யலாம். 


EPF New Rules: PF அக்கவுண்ட் இருக்கா? 31ம் தேதிக்குள்ள இதையெல்லாம் கண்டிப்பா பண்ணிடுங்க!!

 

அதார் இணைப்பு:  

மத்திய அரசின் சமூக பாதுகாப்புச் சட்டம், பிரிவு 142-ன்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுத்தல், ஓய்வூதியம் பெறுதல், காப்பீட்டு பலன்களைப் பெற ஆதார் எண்ணை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நிறுவன முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களின் ஆதார் எண்ணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. எனவே, அனைத்து நிறுவனமும், தங்களது ஊழியர்களின் ஆதார் எண்ணை, வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இந்தக் கால அவகாசத்துக்குள் இணைக்கா விட்டால்  வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது. 

பணியாளர் வருங்கால வைப்பு நிதி - பணியாளர்களின் சேமிப்புடன் இணைந்த காப்பீட்டு திட்டம் (ஈடிஎல்ஐ) : கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக பாதிகப்பட்டவர்களின் நிதி நிலையை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, அதிகபட்ச காப்பீட்டு பலன் ரூ 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்ச காப்பீட்டு பலனாக ரூ 2.5 லட்சம் மீண்டும் இருக்கும். இந்த திட்டம் 2022 பிப்ரவரி 15 வரை அமலில் இருக்கும். ஒப்பந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றும் விதி தாரளமயமாக்கப்பட்டு, இறப்புக்கு 12 மாதங்களுக்கு முன்பு பணி மாறியோரின் குடும்பங்களுக்கும் பலன் கிடைக்கும் என்ற வகையில் விதிமுறை தாராளமாக்கப்பட்டது. 

காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளி, கொரோனா பாதிப்பால் இறந்தால், அவரது குடும்பத்தினர் சராசரி தின ஊதியத்தில் 90 சதவீதம் தொகையை மாதந்தோறும், தங்கள் வாழ்நாளில் பெறலாம். இறந்த ஊழியரின் வாழ்க்கைத்துணை ஆண்டுக்கு ரூ.120 செலுத்தி மருத்துவ சிகிச்சை பெறலாம். இத்திட்டம், கொரோனா  தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு, 30 நாட்களில் இறந்தவர்களுக்கும் பொருந்தும். 



EPF New Rules: PF அக்கவுண்ட் இருக்கா? 31ம் தேதிக்குள்ள இதையெல்லாம் கண்டிப்பா பண்ணிடுங்க!!

பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம்: கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்கள் நல்ல வாழ்க்கை தரத்துடனும் வாழ்வதற்கு உதவும் வகையில் பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் கீழ் குடும்ப ஓய்வூதியம் பெறும் திட்டத்தில் சில மாற்றங்களை அரசு கொண்டு வந்தது. அதன்கீழ், தொழில் சார்ந்த இறப்புகளுக்கு வழங்கப்படும் பணியாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் ஓய்வூதியப் பலன் கொவிட் இறப்புகளுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

ஏற்கனவே உள்ள விதிகளின் படி, தொழிலாளியின் சராசரி தினக் கூலியில் 90 சதவீதத்திற்கு சமமான ஓய்வுதியத்தை குடும்ப உறுப்பினர்கள் பெறலாம். 2022 மார்ச் 24 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். 

மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம்:

மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் சந்தாதாதரின் அனைத்து கணக்குகளும் ஒன்றிணைக்கப்படும் என்றும்,  இதன் காரணமாக, பணி மாறுதலின் போது பழைய பிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்ற வேண்டிய சூழல் எழாது என்றும்  வருங்கால வைப்பு நிதி அமைப்பு  தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
Gold and silver rate today : திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Embed widget